கிராமிய விழிப்புணர்வு திட்ட சங்கங்க‌ளின் பொதுக்குழு கூட்டம்

கிராமிய விழிப்புணர்வு திட்ட சங்கங்க‌ளின் பொதுக்குழு கூட்டம்

கிராமிய விழிப்புணர்வு திட்ட சங்கங்க‌ளின் பொதுக்குழு கூட்டம்

பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் நாகர்கோவில் வட்டார பொதுக்குழு கூட்டமானது முதல் முதலில் 25/08/2018 அன்று மதியம் 2:30 மணிக்கு தென்தாமரை குளத்தில் தூய பனிமய மாதா திருமண மணடபத்தில் வைத்து கிராமிய விழிப்புணர்வு கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தை பொறுப்பேற்று சிறப்பித்தவர்கள் பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் தென்தாமரைகுளம். இக்கூட்டத்திற்கு வட்டார இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்களும், நமது பங்கு தந்தை அருட்பணி டாக்டர் M.C.ராஜன் அவர்களும் தலைமை ஏற்று நடத்தினார்கள். இதில் 319 பெண்கள் கலந்து கொண்டனர்.

“தமிழகத்தில் வளர்ச்சி என்ற போர்வையில் நடைபெறும் அழிவுத்திட்டங்கள்” பற்றி பங்குத்தந்தை அருட்பணி டாக்டர் M.C.ராஐன் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். நாகர்கோவில்  வட்டாரத்தில் 10 மற்றும் 12ம்  வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  அருட்பணி ராஜன் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகளும், கருத்துரைகளும், கவிதையும், விழிப்புணர்வு பாடல்களும் இடம்பெற்றன. வட்டார இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்களால் தென்தாமரை குளம் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

[மேலும் புகைப்படம்]