Church History

வரலாறு
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது பாரம்பரியம். ஓடை முள் காடாக கிடந்த இந்த நிலப்பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு 6 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்  வந்து குடியேறின. இவர்கள் ஒரு சிறு குருசடியை கட்டி தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட்டனர். சாந்தாய் என்ற ஒரு முதிய பெண் தினமும் விளக்கேற்றி வந்தார். காலப்போக்கில் ஓலையால் வேய்ந்த ஒரு சிறு ஆலயத்தை கட்டி அதில் வழிபட்டனர். சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் மக்கள் கொடுத்த வரிப்பணம் பொருட்கள் மற்றும் அவர்களின் உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆலயம் ஓட்டு புரை பதித்த ஒன்றாக மாற்றப்பட்டது. பங்கு பணியாளர் அருட்பணி. சூசைமிக்கேல் (1978-80) அவர்களின் முயற்சியாலும் இந்த மண்ணின் மைந்தர் அருட்பணி டயனீசியஸ் அவர்கள் கொடுத்த பொருளுதவியாலும் இரு பக்கமும் கொஞ்சம் சிமெண்ட் தளம் அமைத்து விரிவுபடுத்தப்பட்டது.
இறுதியாக அருட்பணி P.K.செல்லையன் (1996-2000) அவர்களது முயற்சியாலும் பங்கு மக்களின் ஆர்வமிகு ஈடுபாட்டினாலும் தற்பொழுது அழகுற தோன்றும் ஆலயம் 1997-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 27-12-1997 அன்று ஆயர் லியோன். அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
துவக்கத்தில் குருசடி பங்கின் 22 கிளைச் சபைகளில் ஒன்றாயிருந்த தென்தாமரைகுளம் பிறகு மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி பங்குகளின் கிளையாக செயல்பட்டது. 1966-ம் ஆண்டில் இது ஒரு தனி பங்காக உயர்த்தப்பட்டு முதல் பங்கு அருட்பணியாளராக கிறிஸ்துதாஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று வரை 20 அருட்பணியாளர்கள் இப்பங்கில் பணியாற்றியுள்ளனர்.
அருள்பணி. வல்தாரிஸ் (1982-83) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அடிப்படை கிறிஸ்தவ சமுகங்கள் தற்பொழுது 12 அன்பியங்களாக செயல்பட்டு வருகின்றன.
அருள்பணி அமிர்தராஜ் (1988-91) அவர்கள் மறைமாவட்ட விதிமுறைப்படி பங்கு அருட்பணி பேரவை அமைத்தார் (02-11-1988).
அருட்பணி G. ஜோசப் ரொமால்ட் (2000-2004) அவர்கள் முயற்சியால் தற்பொழுது காணப்படும் பங்கு பணியாளர் இல்லம் 2001-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மக்களின் வரிப்பணம், நன்கொடைகள் மற்றும் உழைப்பினால் திருமண மண்டபம் கட்டப்பட்டு 2002-ம் ஆண்டில் இறை பராமரிப்பு மரியன்னை துறவற சபையினர் வரவழைக்கப்பட்டு தங்களது இல்லம் ஒன்றை பங்கில் நிறுவினர். மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றை அவர்கள் நடத்தி பணிபுரிந்து வருகின்றனர்.

ஏராளமான அருள்வரங்களை வழங்கும் எங்கள் பங்கு பாதுகாவலியான தூய பனிமய அன்னையின் விழாவினை ஆண்டுதோறும் ஜுலை 27 முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை வெகு சிறப்பாக ஆடம்பரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

As per local traditions, the parish of Our Lady of Snows is 300 years old. A group of 6 Catholic families is said to have migrated to this place which was then a land filled with thorns and bushes. This small little community constructed a “Kurusady”. One Ms. Saanthai, an elderly lady in the group lit a lamp daily in the evening and conducted prayers.

Subsequently, they put up a thatched shed and continued the evening prayers. Some 65 years back from now, with the contribution of the growing small community, a tiled shed was constructed in the place of Kurusady.

During the tenure of Fr. Soosai Michael (1978-80), with the financial support of Fr. Dionysius, who hails from the same soil, an extension was put up on both the sides and tiles were laid on the roof.

Fr. P. K. Chellian (1996-2000) brought the entire village together in constructing the current new church. Bishop Leon A Tharmaraj Consecrated on 27-12-1997.

Originally, South Thamaraikulam was one of the 22 mission stations under Kurusady parish. Later it was brought under Mel-Manakudy and still later under Kil-Manakudy. In the year 1966 it was raised as an independent parish. Fr. Christudas was the first parish priest. From then on 18 priests have served the parish until this day.

Fr. M. Valdaris started the Basic Christian Communities (BCCs) in the year 1983 which have expanded to 12 known as Anbiyams.

A new Presbytery was constructed in 2001 during the time of Fr. Joseph Romald. A Parish Hall, construction of which started during the time of Fr. Chelliyan was completed with the combined efforts of the parishioners, at the time of Fr. Romald.

In the year 2002, the Congregation of the Sisters of the Providence … started a community in the parish. They are running a school for the differently abled children of the area.

The Annual feast of Our Parish is celeberatedfrom July 27th to August 5th of Every Year.The Annual feast of Our Parish is celeberatedfrom July 27th to August 5th of Every Year.