Deprecated: Function create_function() is deprecated in /home/ladyofsnow/ladyofsnowsstk.org/wp-content/plugins/revslider/includes/framework/functions-wordpress.class.php on line 257
Grotto – Ladyofsnow

Grotto

தூய தெரசம்மாள் குருசடி

நமது ஆலய வளாகத்தில் உள்ள தூய குழந்தை தெரசம்மாள் குருசடியானது 1985-ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 27/07/1986-ம் தேதி அதாவது நமது ஆலய ஒன்றாம் திருவிழா அன்று ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் (மார்த்தாண்டம்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குருசடியில் மூன்று தளங்களில்  தரை தளத்தில் தூய குழந்தை தெரசாள் சுரூபமும், முதல் தளத்தில் தூய மிக்கேல் அதிதூதர் சுரூபமும், இரண்டாம் தளத்தில் கிறிஸ்து அரசர் சுரூபமும்  அப்போதைய பங்கு தந்தை தனிஸ்லாஸ் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. குருசடியானது அருங்கோண வடிவில் அமைந்துள்ளதால் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் சுரூபம் கண்ணுக்கு புலப்படும்.  இது இக்கட்டிடத்தின் தனி சிறப்பாகும். இந்த எழில்மிகு குருசடியின் தரை தளத்தை பங்கு மக்களின் நன்கொடையாலும், முதல் தளத்தை திரு.ஜாண் போஸ்கோ அவர்களின்  நன்கொடையாலும்,  இரண்டாம் தளத்தை திரு. மரியான் அவர்களின் நன்கொடையாலும் கட்டப்பட்டுள்ளது.  பின்னர் தூய குழந்தை தெரசம்மாள் குழுவினர் சுவர்களுக்கு டைல்ஸ் ஒட்டி அழகுப்படுத்தினர்.  மேலும் 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுண்ணாம்பு வண்ணப்பூச்சியை மாற்றி வால்மஸ்டா எனப்படும் பொருளினால் வண்ணம் பூசப்பட்டு அழகுற உள்ளது. திரு.வில்சன் ஜார்ஜ் அவர்களது நன்கொடையால்  படிக்கு கருப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டது.

தூய ஜார்ஜியார் குருசடி

நமது பங்கில் குமாரபெருமாள் விளையில் அமைந்துள்ள தூய ஜார்ஜியார் குருசடியானது 07/08/2008-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. Fr.மைக்கிள் ஏஞ்சல் அவர்களின் பணிக்காலத்தில் தமாம் வாழ் தாமரை பங்குமக்களின் நிதி உதவியால் நிலம் வாங்கப்பட்டது. பின்னர் நமது பங்கு மக்களின் நன்கொடையாலும் பிறசமய மக்களின் நன்கொடையாலும் 2006-ம் வருடம் தொடங்கி 07/08/2008-ம் வருடம் நிறைவுபெற்று திறப்புவிழாவும் செய்யப்பட்டது. தரைதளத்தில் தூய ஜார்ஜியார் சுரூபமும், முதல் தளத்தில் குழந்தையேசு சுரூபமும் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தூய ஜார்ஜியார் குருசடி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் தூய ஜார்ஜியார் திருவிழாவின் போது ஏப்ரல் 27 இங்கு சிறப்பு ஜெபமாலை செய்யப்படும். எல்லா நாட்களிலும் இரவு 8 மணிக்கு ஜெபமாலை நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களுக்கும் பாதுகாவலராக திகழ்கிறார். நோயினால் வருந்தி கேட்பவருக்கு சுகமளித்து வருகிறார். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து ஜெபம் செய்து புனித ஜார்ஜியாரின் அருளைப் பெற்று செல்கின்றனர். அருகிலேயே மாதாவின் கெபியும் உள்ளது. குறிப்பிட்ட நேரம் அல்லாமல், எல்லா நேரத்திலும் ஜார்ஜியாரை வணங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. நோயிலிருந்து குணமாக வேண்டுபவர்கள் குருசடியில் வைக்கப்பட்டுள்ள விளக்கில் ஐந்து திரி ஏற்றி வேண்டுபவர்களுக்கு தவறாமல் வரமளிக்கிறார்.