மறைக்கல்வி மன்ற அலுவலகம்
நமது பங்கு கீழமணக்குடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்ட காலத்திலிருந்தே மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறுகிறது. மறைக்கல்வி மன்றத்திற்கென தனியாக அலுவலகம் இல்லை. மறைக்கல்வி தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் அருட்பணியாளர் இல்லத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 18 வருடமாக மறைக்கல்வி மன்றத்தினரால் செயல்படுத்தப்பட்டு வந்த சிறுசேமிப்பு, கலையரங்கம் முன்னால் பெஞ்சில் அமர்ந்து வசூலிக்கப்பட்டது. இது சிறிது சிரமமாகவே இருந்தது.
2011-ம் ஆண்டில் பங்குத் தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி.ஹிலேரியஸ் அவர்கள் இதனை கண்ணுற்று மறைக்கல்வி மன்றத்திற்கென ஒரு அலுவலகம் வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அதன்படி கலையரங்கத்திற்கு அருகிலுள்ள அறை மறைக்கல்வி மன்ற அலுவலகமாக மாற்றம் பெற்றது. தற்போது ரூ.80,000/- செலவில் மறைக்கல்வி மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு 29-05-2016 அன்று அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி.ஹிலேரியஸ் அவர்களால் திறந்துவைத்து அர்ச்சிக்கப்பட்டது.