Cemetery

தூய பனிமய அன்னை ஆலய கல்லறைத் தோட்டம்



ஆரம்பத்தில் கல்லறைத் தோட்டமானது 25 சென்று நிலப்பரப்பை கொண்டதாக இருந்துள்ளது.  நாற்புறமும் எசலை முள்ளால் வேலி அமைக்கப்பட்டு வடக்குப்பக்கம் ஒரு பெரிய நுழைவாயிலும், தெற்குப்பக்கம் ஒரு கல் கவுட்டையும் இருந்துள்ளது.

கல்லறைத் தோட்டத்தின் நடுப்பக்கம் அமைந்துள்ள மலையப்பர் குருசடியானது இந்த 25 சென்ட் பரப்பளவில் தான் இருக்கிறது.  இந்த குருசடியில் ஆரம்பத்தில் புன்னைக்காய் எண்ணையால் விளக்கு எரிய வைத்தார்களாம்.  தற்சமயம் மண்ணன்ணெய் விளக்கு பயன்படுத்துகிறார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பின்னால் தாமரைகுளம் திரு. சூசைமுத்து கொத்தனார் அவர்கள் மனைவி திருமதி. வறுவேல் அவர்கள் 15 சென்ட் நிலத்தை கல்லறைத் தோட்டத்துக்கு எழுதிக் கொடுத்தார்களாம் அதில் 2 சென்ட் இடத்தை தங்கள் குடும்ப கல்லறைக்காக ஒதுக்கி வைத்துள்ளார்களாம்.  இந்த 15 சென்ட் இடமானது தற்போது மாமரங்கள் நிறைந்த இடமாகும். அவர்கள் குடும்ப கல்லறைக்காக ஒதுக்கிய இடம் மலையப்பர் குருசடிக்கு நேர் தெற்குப்பக்கம் சுவர் ஓரமாக ஒரு பழைய குருசடி போன்ற கல்லறை உள்ள இடமாகும்.

மாமரங்களுக்கு கீழ்ப்பக்கம் சுனாமி கல்லறைக்கு வடக்குப்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்லறைக்கு தனியாக இடம் இருந்ததாம்.  தற்சமயம் அது கிடையாது.  கல்லறை எல்லோருக்கும் பொதுவாகிறது. குருசடிக்கு மேல் பக்கம் வடக்குபுறமாக 6 சென்ட் நிலத்தை தாமரைகுளம் திரு. மரிய ராஜ ரெத்தினம் அவர்களால் கொடுக்கப்பட்டது.  அதற்க வடக்குப் பக்கம் கிழக்கிலிருந்து மேற்காக உள்ள 7 சென்ட் இடம் திரு. மரிய ஜெபஸ்தியான் அவர்களால் கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை. ஜோசப் ரொமால்டு அவர்கள் பணிக்காலத்தில் தற்போது இருக்கும் குருசடி புதிதாக அமைக்கப்பட்டது.

அருட்தந்தை ஹிலேரியஸ் அவர்கள் பணிகாலத்தில் கல்லறைத் தோட்டத்தில் மின் இணைப்பு பெறப்பட்டது.

அதே கால கட்டத்தில் சுனாமி கல்லறைக்கு கீழ்பக்கம் 9 சென்ட் பூமியானது கல்லறைத் தோட்டத்துக்க வாங்கப்பட்டது.


பின்னர் குருசடிக்கு பின்புறம் வடக்குப்பக்கம் உள்ள 12 சென்ட் இடமும் கல்லறைத்தோட்டத்துக்கு வாங்கப்பட்டது.

தற்போது கல்லறைத் தோட்டமானது சுமார் 74 சென்ட் நிலப்பரப்பைக் கொண்டதாக இருக்கிறது.
கல்லறைத் தோட்டத்துக்கு சென்று வர சாலை வசதியும் இருக்கிறது.
இறந்தோரை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு வசதியாக நான்கு சக்கர தள்ளுவண்டி உள்ளது.