Jubilee arch

தூய பனிமய அன்னை பங்கு பொன்விழா நினைவு நுழைவாயில்

             தூய பனிமய மாதா ஆலயம் தனி பங்காக உயர்த்தப்பட்டதின் 50-ம் ஆண்டை கொண்டாடுவதின் நினைவாக பிரமாண்டமான பொன்விழா நினைவு நுழைவாயில் எழுப்ப தீர்மாணிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி.Dr.M.C.ராஜன் அவர்களின் தலைமையில் வளர்ச்சிக்குழுவில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு மாதிரி நுழைவாயில் வரைபடம் தோ்வு செய்யப்பட்டது. பின்னர் கட்டுமான பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டிருந்த அருட்பணி.S. ஜாண் பிரிட்டோ அவர்களால் 01-05-2017 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 27-07-2017 அன்று மேதகு ஆயர் .S. நசரேன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.  பொன்விழா சாதனைகளில் இந்த பொன்விழா நினைவு நுழைவாயிலும் ஒன்று.