Library

அன்னை அறிவாலயம்
காலத்தினால் அழியாத கவிதைகள்
காலம் கடந்தும் பொருள்படும் கவிதைகள்
மனிதனை செதுக்கி உயர்த்துகின்ற கட்டுரைகள்
மாற்றங்களை வரலாற்றில் தந்த வரலாற்று குறிப்புகள்
வீரத்தையும், ஈரத்தையும் வெளிப்படுத்தும் தேசபற்று நூல்கள்.
நவின நாகரிக வளர்ச்சிக்கு வித்திடும் அறிவியல் விந்தைகள்
உலகச் செய்திகளை உள்ளங்களில் பதியவைக்கும் நாளிதழ்கள்
மனித மாண்பை வளர்க்கும்  திருச்சபை செய்திகள் என ஒட்டுமொத்த நூல்களையும் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது      நம்                                 “அன்னை அறிவாலயம்”.
நம்மவர்களின் அறிவுத் திறனை வளர்த்திட நூலகம் ஒன்று அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் 2013-ம் ஆண்டில் நிறைவேறியது. Fr.V.ஹிலேரியஸ் அவர்களின் முயற்சியால் அன்றைய (2011-2015) பங்குப்பேரவையின் ஒத்துழைப்போடு நூலகம் கட்ட 09-09-2013 அன்று பாராளுமன்ற தலைவர் திருமதி.ஹெலன்டேவிட்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
MP நிதி மற்றும், பங்குநிதி, பங்குமக்களின் நன்கொடை, பங்குமக்களின் உடல் உழைப்பு அனைத்தும் சேர்ந்து சிறப்பான நூலகம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.
மூன்று  மாதங்களில்  பணிகள்  நிறைவு  பெற்று 29-12-2013 அன்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார்கள்.  சிறப்பு விருந்தினராக நமது பேரூராட்சி தலைவர் பாலச் சந்திரன் அவர்கள் வருகை தந்தார்கள்.  மேலும் திறப்புவிழாவின் போது பங்குத்தந்தை. ஹிலேரியஸ் மற்றும் பங்குமக்கள் அதிகமாக கலந்து கொண்டார்கள்.
நமது “அன்னை அறிவாலயத்தில்” தினசரி நாளிதழ்கள் வாரப்பத்திரிகை, மாதப்பத்திரிகை, கதைகள், கட்டுரைப் புத்தகங்கள் என ஏராளமான நூல்கள் நம்மவர்கள் படிப்பதற்கு வசதியாக வைக்கப்பட்டுள்ளது.  அனைவரும் தவறாமல் படித்து அறிவை வளர்த்துக் கொள்வோம்.