BCC Organization Centre

அன்பிய ஒருங்கிணையம்

நோக்கம் :

இடவாரியாக குடும்பங்கள் சிறு குழுக்களாக கூடி ஜெபித்தல், உறவாடல், உரையாடல், ஏழை எளியோருக்கு உதவி செய்து உற்சாகமூட்டுதல், பங்கினை ஒரு உறவு குடும்பமாக உருவாக்க முயறசி செய்தல்.
மொத்த அன்பியங்கள் : 12

தோற்றம் :

 1982-ம் ஆண்டு தந்தை வல்தாரிசு அவர்களின் பணிகாலத்தில் எமது பங்கில் அன்பியங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் சமூகங்கள் என்று அழைக்கப்பட்ட இவை பின்னர் 1996-ம் ஆண்டு தந்தை.P.K செல்லையன் அவர்களால் அன்பியங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
மொத்த அன்பியங்கள் : 12
கூட்டம் நடைபெறும் நாள் : மாதத்தின் 2-ம் ஞாயிறு
நேரம் : மதியம் 1.30 மணி
இடம் : பங்குத்தந்தை இல்லம்
உறுப்பினர்கள் : 12 அன்பியங்களின் நிர்வாகிகள் 60போர்.

அன்பிய ஒருங்கிணைய நிர்வாகிகள்

அன்பிய ஒருங்கிணைய உறுப்பினர்கள்

அன்பியங்கள் சிறப்பாக நடைபெற எடுத்த முயற்சிகள்

1. அனைவரும் வட்ட வடிவில் இருப்பது. நாற்காலிகள் பயன்படுத்துதல்.
2. அனைத்து அன்பியங்களிலிலுமுள்ள குடும்பங்களை சந்திக்க ஒருங்கிணைப்பு உறுப்பினர்கள் குழுக்களாக பிரிந்து குடும்பங்களுடன் உரையாடி குறை நிறைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு கண்டு அவர்கள் அன்பிய கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
3. 2015-ம் ஆண்டு முதல் அன்பியங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக அன்பியங்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு அதிக மதிப்பண் பெறும் மூன்று அன்பியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

பயிற்சிகள் :

 • 2012-ம் ஆண்டு புற்றுநோய் கண்டறிதல் தடுப்பு முறை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
 • 2013-ம் ஆண்டு Dr.ஆண்ட்ரூ காட்வின் அவர்கள் தலைமையில் "இயற்கை உணவே மருந்து" என்ற தலைப்பில் பயிற்சி நடத்தப்பட்டது.
 • 2014-ம் ஆண்டு அருட்பணியாளர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் குடும்ப நலம் குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சி குறும்படத்துடன் நடத்தப்பட்டது.
 • 2015-ம் ஆண்டு அன்பிய நிர்வாகிகளுக்கு கருத்தாளர் திருமதி.பிலோமினா அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
 • இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு "தற்கொலையை தவிர்ப்போம்" என்ற தலைப்பில் திரு.அப்புக்குட்டன் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
 • திட்டங்கள்:

  1. அன்பியத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் வீட்டுத்தோட்டம் அமைத்து நோயிலிருந்து விடுபட வேண்டும்.
  2. பிளாஸ்டிக் தவிர்க்கப்பட வேண்டும்.
  3. துணைக்குழுக்கள் செயல்பட முயற்சி எடுக்க வேண்டும்.
  4. அணைத்துக் குடும்பங்களிலும் கட்டாயமாக வீட்டுக்கொரு சேமிப்பு கணக்குகள் அல்லது R.D.யோ போட முயற்சி எடுத்தல்.

  செயல்பாடுகள் :

  • 23/11/2019 கன்னியாகுமரி வட்டார அன்பிய மாநாட்டில் நமது பங்கு சார்பாக 56 பேர் கலந்து சிறப்பித்தோம். மேலும் சிதைந்த முகமும் ஊடகமும் என்ற மைய கருத்தின் அடிப்படையில் நமது பிள்ளைகள் விழிப்புணர்வு நடனமாடி சிறப்பித்தனர்.
  • நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சகல ஆத்மாக்கள் திருப்பலிக்கு ரூக்கோட் அமைப்பின் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கைகளால் செய்த 79 நெகிழி மலைகள் விற்று 5590 ரூபாய் கொடுத்தோம்.
  • 24/10/2019 கொட்டாரம் புனித யூதா ததேயு ஆலயம் திருவிழாவிற்கு 12 அன்பியங்கள் இணைந்து கொடுத்த நன்கொடை ரூபாய் 17600, தேங்காய் 95, அரிசி 5 கிலோ கொடுக்கப்பட்டது.
  • 2019 செப்டம்பர் மாதத்தில் இயற்கை மருத்துவம் பற்றி பயிற்சி டாக்டர். டங்க்ஸ்டன்  அவர்களால் கொடுக்கப்பட்டது 75 பேரும் கலந்து பயன் பெற்றார்கள்.
  • 10/6/2019 அன்று இலங்காமணிபுரம் புனித அந்தோணியார் ஆலய சமபந்திக்கு 12 அன்பியங்கள் வழியாக கொடுத்த நன்கொடை ரூபாய் 18920, தேங்காய் 125 கொடுக்கப்பட்டது.
  • 15/5/2019 அன்று அன்பிய ஒருங்கிணையம் வழியாக கானாவூர் திருமண உதவி திட்டத்திற்கு ரூபாய் 2000 கொடுத்தோம்.
  • 2019 தவக்காலத்தில் ஏழைகள் உதவியாக 12 அன்பியம் சேர்ந்து ரூபாய் 32000, மிக்ஸி 1, அரிசி 36 கிலோ, தேங்காய் 65 மேலும் துணி வகைகளும் கொடுக்கப்பட்டது.
  • 6 /1/2019 அன்று விற்பனை விழா நடத்தி 34950 ரூபாய் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்பிய ஒருங்கிணையம் வழியாக கொடுக்கப்பட்டது.
  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக 12 அன்பியங்கள் இனைத்து 45,250/-ருபாயும் துணிகளும் மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
  • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக நமது 12 அன்பியங்கள் சார்பாக 15,250/-ருபாயும் 84தேங்காயும் கொடுக்கப்பட்டது.
  • மாதம் ஒரு முறை நடைபெறும் அன்பிய ஒருங்கிணைய கூட்டத்தின் அன்பியங்களின் செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
  • நவம்பர் 2 ஆத்மாக்கள் திருவிழாவிற்கு கொட்டாரம் ரூக்கோட் இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பூமாலைகள் விற்று கொடுத்தோம்.
  • 20/10/2017 கொட்டாரம் புனித யூதா ததேயு ஆலய அசன திருவிழாவிற்கு 15525 ரூபாயும், 31 தேங்காயும் கொடுக்கப்பட்டது.
  • 7/1/2018 அன்று விற்பனை விழா நடத்தி ரூ.33000/- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.
  • 25/3/2018 அன்று பசிப்பிணி அறப்போர் காணிக்கை ரூ.31635/- வழங்கப்பட்டது.
  • 6.28/3/2018 அன்று தவக்கால அன்பிய ஏழைகள் நிதி உதவியாக 12 அன்பியங்கள் சேர்ந்து 11320/ரூபாயும், 105கிலோ அரிசியும், 63 தேங்காயும் ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
  • 1/4/2018 அன்று தவக்கால உண்டியல் காணிக்கையாக 12 அன்பியங்களும் சேர்ந்து ரூ.59528/- பிரித்துக் கொடுக்கப்பட்டது.
  • 12/12/2018 அன்று பஜனை நடத்தி 2800/-ரூபாய் நமது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கொடுத்தோம்.
  • ஒருங்கிணையத்தின் ஆண்டுத்திட்டமான வீட்டுத் தோட்டம் அமைத்தல் ஒருசில வீடுகளில் அமைத்து பயன்பெறுகிறோம்.
  • துறைமுகத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் அனைவரும் கலந்து கொண்டோம்.
  • ஒரு சில அன்பியங்கள், தங்களின் அன்பியத் தெருக்களை தாங்களே சுத்தம் செய்கிறார்கள்.
  • 12. நமது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு ஊட்ட அன்பியம் வழியாக உறுப்பினர்கள் செல்கிறார்கள்.
  • நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா (01/12/2013) மாநாட்டில் அன்பிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நன்கொடையாக ரூ.15000/- கொடுக்கப்பட்டது.
  • 30/09/2014 அன்று கோட்டாறு மறைவட்டம் சார்பாக நடத்திய திருமணமான தம்பதியர்களின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு 4 தம்பதியர்களை கலந்து கொள்ள செய்தது.
  • 16/11/2014 அன்று சுற்றுபுற தூய்மை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய அட்டைகள் ஏந்தி பேரணி நடத்தியதுடன் சாலையோரத்திலுள்ள குப்பைகளை அகற்றி பூச்செடிகள் நடப்பட்டது.
  • 14/04/2015 அன்று பாலியல் வன்கொடுமைகளை வேரறுப்போம் என்ற மனித சங்கிலியில் சுசீந்திரம் முதல் வழுக்கம்பாறை வரை கனிசமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர்.
  • வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் விற்பனை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை எம்பங்கில் செயல்பட்டுவரும் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.
  • 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கு போர்வை வழங்குவதற்கு உதவுமாறு கே.எஸ்.எஸ். நிறுவனம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க எம்அன்பிய நிர்வாகிகள் பங்கிலுள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று வசூலித்த தொகை ரூ.20,825/- ஆகும். (இத்தொகைக்கு 119 படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன).
  • 19/04/2015 அன்று தென் தாமரைகுளம் மற்றும் குமார பெருமாள்விளை பகுதிகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பஞ்சாயத்துக்கு கையொப்பங்கள் சேகரித்து மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம் திங்கள் கிழமை தோறும் காலையில் குப்பை வண்டி வந்து குப்பைகளை எடுத்து செல்கிறது.
  • சுதந்திரதினவிழாவை முன்னிட்டு "தலைகவசம் உயிர் கவசம்" என பதாகைகள் எழுதி மாபெரும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பொற்றையடி இரயில்வே நிலையம் அருகில் மரங்கள் நடப்பட்டது.
  • இராமனாதிச்சன்புதூர்மண்டலத்தில் சிறந்த அன்பிய ஒருங்கிணையமாக தொடர்ந்து 3 முறை சுழற்கோப்பையை கைப்பற்றியுள்ளோம்.
  • 2014-ம் ஆண்டு இராமனாதிச்சன்புதூர் மண்டல நிர்வாகிகள் தென் தாமரைகுளம் தொன் குவனெல்லா மாற்று திறனாளிகள் பள்ளியில் வைத்து கிறிஸ்மஸ் விழா கொண்டாட நன்கொடையாக ரூ.18,700/-ம், 2015-ம் ஆண்டு பாம்பன் விளை சார்லஸ் மாற்று திறனாளிகள் இல்லத்தில் வைத்து கிறிஸ்மஸ் விழா கொண்டாட நன்கொடையாக ரூ.10,200/-ம் வழங்கியுள்ளோம். அவற்றில் எங்கள் உறுப்பினர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
  • இரக்கத்தின்ஆண்டை முன்னிட்டு நோயாளிகள் மற்றும் முதியவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம்.
  • இரக்கத்தின்ஆண்டை முன்னிட்டு மறைவட்ட திட்டத்துடன் இணைந்து பங்கிலுள்ள அனைத்து குடும்பங்களையும் சந்தித்து கணிசமான அளவில் அரிசி, தேங்காய் மற்றும் உடைகள் சேகரித்து வழங்கினோம்.
  • அனைத்து அன்பியங்களிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் தகவல் பட்டியல் சேகரிக்கப்பட்டது.
  • எமதுபங்கில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் செல்ல குழந்தைகளுக்கு உணவூட்ட பள்ளி நாட்களில் அன்பியம் வாரியாக 2 நபர்கள் வீதம் சென்று வருகிறார்கள்.