BCC1 St. Peter

தூய பேதுரு அன்பியம்

அன்பியம்-1

    பெயர்: புனித பேதுரு அன்பியம்
    மொத்த குடும்பங்கள்: 30
    செயல்படும் குடும்பம் : 25
    கூடும் நாள் - ஞாயிறு
    கூடும் இடம் - தெரசம்மாள் குருசடி
    கூடும் நேரம் - மாலை 5.00மணி

நிர்வாகிகள்

    வழிகாட்டி - பங்குத்தந்தை, அருட்சகோதரிகள்
    தலைவர்:திரு.லாரன்ஸ் ஜாண்சன்
    துணைத்தலைவர்:திரு.ஜெயபாலன்
    செயலர்: திருமதி. ராஜேஸ்வரி
    துணைச்செயலர்: திருமதி. சாந்தி
    பொருளர்: திருமதி. மேரி விஜயா

சிறப்பு செயல்பாடுகள்

  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 2750/-ருபாயும் வேட்டி2, சர்ட் 2, சாரி 1, சால்வே 1, சுடிதார் 1, பேண்ட் 1 துணிகளும் அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
  • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1300/-ருபாய் கொடுக்கப்பட்டது.
  • எமது அன்பியத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் அன்பிய கூட்டங்களில் ஒற்றுமையுடன் கலந்து செயல்பாடுகின்றோம்.
  • கொட்டாரம் ஆலயம் கட்ட நன்கொடை பிரித்துக் கொடுத்தோம்.
  • 25-01-2018 அன்று அன்பிய திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டு, அன்பு விருந்து பரிமாறினோம்.
  • 20-01-2018 அன்று தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற துறைமுக எதிர்ப்பு போராட்டத்திலும், இதர ஊர்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் எம் அன்பிய மக்கள் பெரும்பான்மையாக கலந்து கொள்கிறோம்.
  • தவக்காலத்தை முன்னிட்டு எமது அன்பியத்தை சார்ந்த ஒரு ஏழை குடும்பததினர் ஒருவருக்கு வீடுகட்ட ரூ.500/- நன்கொடையாக வழங்கியுள்ளோம்.
  • பெரிய வியாழன் அன்று எமது அன்பியத்தை சோ்ந்த ஏழை ஒருவருக்கு ரூ.1450/- பிரித்து கொடுத்தோம்.
  • பெரிய வெள்ளி அன்று எமது அன்பிய உறுப்பினர் திரு. ஜெயபாலன் அவர்கள் இலவசமாக மக்களுக்கு மோர் வழங்கினார்கள்.
  • தவக்கால உண்டியல் காணிக்கையாக ரூ. 4500/- கொடுக்கப்பட்டது.
  • வருடந்தோறும் பேதுரு திருவிழாவின் போது எமது அன்பியம் சார்பில் திருப்பலி நிறைவேற்றி விருந்துண்டு மகிழ்கின்றோம்.
  • ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் விழாவின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசு பொருட்கள் பரிமாறியும்  X Mas Tree, இனிப்புகள் போன்றவற்றை பங்கு தந்தை முன்னிலையில் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றோம்.
  • நம் பங்கில் செயல்பட்டு வரும் மாற்றுதிறனாளிகள் பள்ளிக்கு வருடத்திற்கு ஒரு முறை நன்கொடை வழங்கியும் மேலும் அவர்கள் சிறப்பான முறைகளில் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா, பள்ளி ஆண்டு விழா போன்ற கொண்டாட்டங்களில் எம் அன்பிய உறுப்பினர்கள் கலந்து கொண்டும் உதவிகள் புரிந்தும் வருகின்றோம்.
  • பள்ளிகள் ஆரம்பிக்கும் ஜூன் மாதம் எம் அன்பியத்தை சார்ந்த ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கி தருகின்றோம்.
  • எம் பங்கின் திருப்பலியில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வெண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மேலும் எம் அன்பியம் சிறப்பிக்கும் திருப்பலியில் சிறப்பான முறையில் கலந்துகொண்டு வருகின்றோம்.
  • திருவிழா காலங்களில் பிற அன்பியங்களோடு இணைந்து திருப்பலி, கலை நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகின்றோம்.
  • எம் அன்பிய உறுப்பினர்கள் வழிபாட்டுக்குழு, மரியாயின் சேனை, சேவாசங்கம், மறைக்கல்வி, குடும்ப நல பணி குழு, விவிலிய குழு போன்ற அனைத்து சபை சங்கங்களிலும் சிறப்பான முறையில்கலந்து கொண்டு வருகின்றார்கள்.
  • வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா சென்று அன்பை பகிர்கின்றோம்.
  • எமது அன்பித்தை சார்ந்தோர் யாராவது மரணமடைந்தால் அவர்களுக்கு ஒருநாள் அன்பியத்தின்சார்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி வருகின்றோம்.