BCC10 St. Sebastin

புனித ஜெபஸ்தியார் அன்பியம்

அன்பியம் எண் 10

    கூடும் நாள்: ஞாயிறு
    கூடும் நேரம்: மாலை 6.00 மணி
    கூடும் இடம்:தேவசகாயம் பிள்ளை குருசடி
    மொத்த குடும்பங்கள்: 24
    வழிகாட்டிகள்: பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகள்

நிர்வாகிகள்

    தலைவர் : திரு. அருள் கிளாஸ்டர்
    துணைத்தலைவர் : திருமதி. ஜாய்ஸ் மேரி
    செயலர் : திருமதி. மேரி ரெக்செலின்
    துணைச்செயலர் : செல்வி. அக்ஸலின் ஸ்டெனி
    பொருளர் : செல்வி. அஸ்லின் ரிஜஷா

சிறப்பு செயல்பாடுகள் : 

  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 2000/-ரூபாயும், 2 டீசார்ட்டும் அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
  • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1600/-ரூபாயும், 2 தேங்காயும் கொடுக்கப்பட்டது.
  • வர்த்தக பெட்டக துறைமுக கவன ஈர்ப்பு போராட்டத்தில் எமது அன்பிய மக்கள் கலந்து கொண்டனர்.
  • டிசம்பர் மாதம் நடைபெற்ற விற்பனை விழாவில் கிடைத்த தொகை ரூ.1100/- மாற்று திறனாளிக் குழந்தைகளின் இல்லத்திற்கு கொடுக்கப்பட்டது.
  • புனித யூதா ததேயுஸ் திருவிழாவின் போது நடைபெற்ற சமபந்திக்க நன்கொடை ரூ.1200/- வழங்கப்பட்டது.
  • மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு எமது அன்பிய பங்குப் பேரவை உறுப்பினர் திரு. இரத்தினராஜ் அவர்கள் வழியாக பொன்னப்ப நாடார் காலனி ஊரைச் சார்ந்த திரு. சுரேஷ் - சுருதி Construction அவர்கள் சீருடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.
  • புனித யூதா ததேயுஸ் கோவில் கட்டுவதற்கு எமது அன்பியத்தில் உள்ளவர்கள் நன்கொடை வழங்கி உள்ளார்கள்.
  • தவக்காலஉண்டியல் மூலம் ரூ.2500/- கொடுக்கப்பட்டுள்ளது.
  • திருமதி. பொன்னம்மாள் அவர்களுக்கு எமது அன்பியத்தில் உள்ளவர்கள் அரிசி, தேங்காய், ரூபாய் கொடுத்துள்ளோம்.
  • எமது அன்பியத்திலுள்ள ஐந்து வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைத்து பயன் அடைந்துள்ளனர்.
  • பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு அனைவரும் இணைந்து சர்க்கரை பொங்கல் இட்டு மகிழ்ந்து கொண்டாடினோம்.
  •  அக்டோபர் 1 முதியோர் தினம் கொண்டாடப்பட்டு முதியோருக்கு சிறப்பு பரிசுகள், இனிப்பு வகைகள் கொடுத்து அவர்களது நீங்காத நினைவுகளை பேச வைத்து மகிழ வைத்தோம்.
  •  விவிலியகண்காட்சி தினத்தன்று திருவிவிலிய உவமைகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், இயற்கை வளங்களை - பாதுகாத்தல் போன்றவைகள் செயல்வடிவங்களிலும், நடிப்பு முறைகளிலும் எம்இளை!ர்கள், இளம்பெண்களால் நடத்தப்பட்டது.
  •  தேசிய இளைஞர்கள் தினம் கலைநிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டது.
  •  டெங்கு, சிக்கன்குனியா பரவும் விதம், தடுக்கும் முறைகள் பற்றிய துண்டுபிரசுரம் அருகில் உள்ள அன்பியங்களுக்கும் வழங்கப்பட்டது.
  •  அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ் குடில் அமைத்தோம்.
  •  கிறிஸ்துமஸ் அன்று இரவு கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது.
  •  பிறந்தநாள் விழா, திருமணநாள் விழா போன்ற சிறப்பு தினங்கள் அன்று அவரவர் இனிப்புகள் வழங்கி அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர்.
  •  தேவசகாயம்பிள்ளை திருவிழாவை முன்னிட்டு அனைவரும் இணைந்து ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் பிள்ளை ஆலயத்திற்கு சென்று வந்தோம்.
  •  2016-ம் ஆண்டு சிறப்பு செயல்பாடுகளில் சிறந்த அன்பியத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளோம்.
  • இவ்வாறு எங்கள் அன்பியமானது துடிப்போடும் அன்புறவோடும், மகிழ்ச்சியின் குடும்பமாக இணைந்து செயல்பட்டு, பிறர் அன்பு செயல்களிலேயும் முன்மாதிரியாக செயல்படுகிறது என்பதை மகிழ்வோடு தொிவித்துகொள்கிறோம்.