Deprecated: Function create_function() is deprecated in /home/ladyofsnow/ladyofsnowsstk.org/wp-content/plugins/revslider/includes/framework/functions-wordpress.class.php on line 257
BCC 12 St. Ignatius of layola – Ladyofsnow

BCC 12 St. Ignatius of layola

புனித இஞ்ஞாசியார் அன்பியம்

அன்பியம் - 12

    கூட்டம் கூடும் இடம்- தண்ணிங்கரை
    கூடும் நாள்- ஞாயிறு
    கூடும் நேரம் - மாலை 5.30 மணி
    மொத்த குடும்பங்கள் - 26

நிர்வாகிகள்

    தலைவர்: திரு. செல்வராஜ்
    துணைத்தலைவர்: திரு. சுதாகர்
    செயலர்: திருமதி.எஸ்தர் ராணி
    துணைச்செயலர்: திருமதி. செலின்
    பொருளர்: திருமதி. செலின் மலர்

எமது அன்பிய கூட்டமானது ஞாயிறு மாலை 5.30 மணியளவில் ஜெபமாலையுடன் ஆரம்பமாகி பின்னர் பாடல்பாடி, விவிலியம் வாசிக்கப்பட்டு, விவிலிய கருத்துக்கள் பரிமாறப்படும். பின்னர் செயலர் அறிக்கை, பொருளர் அறிக்கை வாசிக்கப்பட்டு தலைவரிடம் ஒப்புத‌ல் பெறப்படும். பின்னர் அன்பிய அடித்தளம் வாசிக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும்.

திட்டங்களும், செயல்பாடுகளும்

  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 3500/-ரூபாயும், 1நைட்டி, 1போர்வை, 2துணி, 1வேட்டியும் அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
  • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1000/-ரூபாய் கொடுக்கப்பட்டது.
  • ஜனவரி மாதம் கொட்டாரம் ஆலயத்தில் நடைபெற்ற அசனத்திற்கு நன்கொடையாக ரூ1200/- கொடுத்து உதவினோம்.
  • கொட்டாரம் கோயில்கட்ட நன்கொடை கொடுத்து உதவினோம்.
  • பூ மாலை வாங்கி மாற்று திறனாளிகளுக்கு உதவினோம்.
  • ஜனவரி 7-ம் தேதி ஆலயத்தில் நடைபெற்ற விற்பனை விழாவில் கிடைத்த இலாபத்தை மாற்று திறனாளிகளுக்கு கொடுத்து உதவினோம்.
  • தவக்கால உண்டியல் ரூ.4224/- ஏழைகள் நிதிக்காக கொடுத்தோம்.
  • தவக்கால ஏழைகள் நிதி ரூ.900, 2 பக்கா அரிசி 1 ஹார்லிக்ஸ் வசூலிக்கப்பட்டு அன்பியத்திலுள்ள மூன்று ஏழைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது,
  • பன்னாட்டு சரக்குபெட்டக முனைய போராட்டங்களில் கலந்து கொள்கிறோம்.
  • அன்பியத்தில் நோய்வாய்பட்டவர்களின் வீடுகளை சந்தித்து அவர்களுக்காக ஜெபிக்கப்படுகிறது.
  • வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டிய அவசியத்தையும், மற்றும் கருத்துக்களையும் அன்பியக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு உறுப்பினர்களை தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்தி வருகின்றோம்.
  • சுற்றுப்புற தூய்மையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி அவரவர் வீட்டையும் சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைக்க வலியுறுத்தி வருகிறோம்.
  • அன்பிய கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டம் ஒரே இடத்தில் கூட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு செயல் படுத்தபடுகின்றது.
  • நோயாளிகள், வயது முதிர்ந்தவர்களை சென்று சந்தித்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு செயல் படுத்தபடுகின்றது.

ஆலய ஈடுபாடு

நமது பனிமய அன்னை ஆலய திருவிழாவின் போது திருவழிபாட்டை சிறப்பிப்பது மற்றும் கலைநிகழ்ச்சிகள் வழங்குவதில், அன்பிய மக்கள் மிகுந்த ஈடுபாடு செலுத்தியுள்ளனர். ஞாயிற்று கிழமை வழிபாடுகளிலும், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.