BCC2 St. Avila Theresa

புனித அவிலா திரேசா அன்பியம்

அன்பியம் - 2

  அன்பியத்தின் பெயர் - புனித அவிலா திரேசா
  நடைபெறும் இடம் - தூய பனிமய அன்னை ஆலய வளாகம்
  நேரம், நாள் - ஞாயிறு மாலை 5.30 மணி
  அன்பிய மொத்த குடும்பங்கள் : 34

நிர்வாகிகள்

  தலைவர் : தனிஸ்லாஸ்
  துணைத்தலைவர் : செல்வி
  செயலர் : லெயோனிஸ் புனிதா
  துணைச்செயலர்: மரிய செல்வி
  பொருளர் : ஏசு செல்வ ராணி

நோக்கம்

 1. அன்பிய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து புதிய உறவு வளர்க்க முயற்சிகள் எடுப்பது.
 2. இறைவார்த்தையை அதிகமாக அனுபவித்து, ஒரு குட்டித் திருச்சபையாக செயல்பட முயல்வது.
 3. அன்பியம் என்பது, அன்பை இணைக்கக் கூடிய ஒரு தளம் தான் அன்பியம்.
 4. திருவிவிலியம் வாசித்து இயேசுவோடு நாமும் இணைய வேண்டும்.

தோற்றம்

1982-ம் வருடம் தந்தை வல்தாரிசு அவர்களால் “மலைப் பொழிவு“ என்று ஆரம்பிக்கப்பட்ட சமூகம் பின்னர்1996-ம் வருடம் தந்தை P.K. செல்லையன் அவர்களால் “புனித அவிலா திரேசா” அன்பியமாக பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

அன்பியத்தின் செயல்பாடுகள்

 • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 2620/-ருபாயும் டீ சர்ட் 1, சாரி 1, லுங்கி1   அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
 • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1600/-ருபாயும் 7 தேங்காயும் கொடுக்கப்பட்டது.
 • 24-09-2017 கீழ் மணக்குடி மிக்கேல் அதிதூதர் குருசடிக்கு நன்கொடையாக 1080/- ரூபாய் கொடுத்தோம்.
 • 20-10-2017 கொட்டாரம் கோவில் திருவிழா அசனத்திற்கு 1750/- ரூபாயும், 2 தேங்காயும் வழங்கினோம்.
 • நவம்பர் 2 ஆத்மாக்கள் திருவிழாவிற்கு ரூக்கோட் இந்தியாவின் மாற்றுதிறனாளிகளால் தயாரிக்கப்படுகிற நெகிழி பூமாலைகள் 44 வாங்கி பயன்பெற்றோம்.
 • 7-1-2018 அன்று விற்பனை விழாவில் ரூபாய் 3000/- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கொடுத்தோம்.
 • கொட்டாரம் புனித யூதா ததேயு ஆலயம் கட்ட எங்கள் அன்பியத்தில் இருந்து 6400 ரூபாய் நன்கொடையாக வழங்கினோம்.
 • தவக்கால அன்பிய ஏழைகள் உதவியாக 720 ரூபாயும் 5கிலோ அரிசியும் 9 தேங்காயும் திரு. அருளானந்தம் அவர்கள் குடும்பத்திற்கு வழிங்கினோம்.
 • 1-4-2018 தவக்கால உண்டியல் காணிக்கையாக 5459ரூபாய் கொடுத்து உதவினோம்.
 • 28-3-2018 அன்று நடந்த இரத்ததான முகாமில் எங்கள் அன்பிய உறுப்பினர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.
 • துறைமுக ஆர்ப்பாட்டங்களில் எங்கள் அன்பிய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
 • எங்கள் அன்பியங்களில் முதல் முயற்சியாக ஒருசில வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்து பயன்பெறுகிறோம்.
 • மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்துகிறோம்.
 • எங்கள் அன்பிய பாதுகாவலியாம் புனித அவிலா திரேசா அவர்களின் திருவிழாவை அக்டோபர் 15-ம் தேதி ஆடம்பர திருப்பலியும் அதனை தொடர்ந்து சிறிய விருந்தும் அன்பியத்தில் வைத்து நடத்தப்பட்டுவருகிறது.
 • வருடத்திற்கு ஒருமுறை சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டு 2015-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம்வகுப்புகளில் அரசு பொது தேர்வு எழுதிய எம் அன்பிய மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றவருக்குபரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 • அன்பிய கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக எம்அன்பியத்திலுள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று கூட்டம் நடத்தப்பட்டது.
 • கிறிஸ்து பிறப்பு நிகழ்வை முன்னிட்டு குழந்தை ஏசு சுரூபம் அன்பியத்திலுள்ள அனைத்துஇல்லங்களுக்கும் எடுத்து சென்று ஜெபம் மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறி பரிசு பொருட்கள்பரிமாறப்பட்டும் வருகிறது.
 • தவக்காலத்தில் ஏழைகளுக்கு பண உதவி செய்து வருகிறோம்.
 • பங்குத்தந்தை, பங்குபேரவை மற்றும் அன்பிய ஒருங்கிணையத்துடன் இணைந்து பங்கின் வளர்ச்சிக்குஉறுதுணையாக செயல்பட்டு வருகிறோம்.