BCC 4 Christ the King

கிறிஸ்து அரசர் அன்பியம்

அன்பிய எண் : 4

  கூட்டம் நடைபெறும் இடம்: அருட்சகோதரிகள் இல்ல வளாகம்
  கூடும் நாள்: ஞாயிறு
  கூடும் நேரம்: மாலை 5.00 மணி
  மொத்த குடும்பங்கள்: 25
  வழிகாட்டிகள்: பங்குத்தந்தை, அருட்சகோதரர் மற்றும் அருட்சகோதரிகள்.

நிர்வாகிகள்

தலைவர் : திரு.ஞான ஜெபசிங்
  துணைத்தலைவர் : திருமதி. ஜிம்சி
  செயலர் : திருமதி. சபினா பவுலின் கிறாஸ்
  துணைச்செயலர் : திருமதி. ரெஜி
  பொருளர் : திருமதி. லூனா ஜோயல்

தோற்றம் :

1982-ம் ஆண்டு பங்குத்தந்தை வல்தாரிசு அவர்களால் மலைப்பொழவு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அன்பிய சமூகம், பின்னர் 1996-ம் ஆண்டு பங்குத்தந்தை P.K.செல்லையன் அவர்களால் கிறிஸ்து அரசர் அன்பியம் என பெயர் சூட்டப்பட்டு பங்குத்தந்தை ரொமால்டு, பங்குத்தந்தை மைக்கிள் ஏஞ்சல் மற்றும் பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர் வழிகாட்டுதலோடு இன்று பங்குத்தந்தை ராஜன் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நோக்கம் :

குடும்பங்கள் கூடி உறவாட அன்பை பகிர்ந்திட, அறிவை பெருக்கவும், இறைவேண்டல் புரியவும், கைவிடப்பட்டோர் நலன் காத்திட, தேவையில் இருப்போருக்கு உதவிடவும் ...

செயல்பாடுகள் :

 • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 5000/-ரூ  அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
 • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1000/-ரூ கொடுக்கப்பட்டது.
 • எமது அன்பியம் பங்கு அளவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் குடில் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றோம்.
 • ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் அளித்த பயிற்ச்சிகளில் கலந்து கொண்டு அதன்படி எமது அன்பிய அங்கத்தினர்களின் வீட்டுகளில் ‌தோட்டம் அமைத்து, சுகாதாரத்தை கடைபிடிக்கின்றோம்.
 • அன்பியத்திலுள்ள முதியோர்களையும், நோயாளிகளையும் சந்திக்கின்றோம்.
 • விற்பனை விழாவில் கலந்து கொண்டு நன்கொடை கொடுத்தோம்.
 • கொட்டாரம் கோவில் கட்டுமான பணிக்காகவும், அசனத்துக்காகவும் நன்கொடை வழங்கினோம்.
 • தவக்கால உண்டியல் சேகரித்தோம்.
 • தவக்காலத்தில் ஏழைகள் நிதியாக மருத்துவ செலவுக்காக உதவி வழங்கப்பட்டது.
 • காண்வென்ட் சென்று செல்ல குழந்தைகளுக்கு உணவு ஊட்டப்பட்டு வருகின்றோம்.
 • அன்பிய திருப்பலி வைத்து 8/6/2018 அன்று சிறப்பித்தோம்.
 • வருடபிறப்பு கிறிஸ்துமஸ் விழாக்களை அன்பியத்தில் உறுப்பினர்கள் அனைவரும் சோ்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி, வாழ்த்துக்கள் கூறி கொண்டாடப்பட்டது.
 • தவக்காலத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று சிலுவைப்பாதை செய்தல், மற்றும் ஏழை குடும்பம் ஒன்றுக்கு உதவி செய்தல்.
 • அன்பியத்தில்திருப்பலி சிறப்பித்தல்.
 • மாற்றுத்திறனாளிகள்பள்ளிக்கு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை நன்கொடை வழங்குதல். மற்றும் கிறிஸ்துமஸ், பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அன்பிய உறுப்பினர் கலந்து கொண்டு உதவி செய்தல் மற்றும் விழா கொண்டாடுதல்.
 • திருவிழா திருப்பலியை அனைத்து அன்பியங்களுடனும் சோ்ந்து சிறப்பித்தல் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திறமைகளை வெளிப்பட செய்தல்.
 • எம்அன்பிய உறுப்பினர்கள் பங்கில் செயல்படும் அனைத்து குழுக்கள் மற்றும் சிறப்பு பணிகளில் செயல்படுதல்.
 • ஜெபமாலைமாதத்தை முன்னிட்டு அனைவரது இல்லத்திற்கும் சென்று ஜெபமாலை செய்து அன்பியத்திற்கு வரவழைத்தல்.
 • குடியரசுதினம, சுதந்திரதினம், பொங்கல், கிறிஸ்துமஸ் விழாக்களை முன்னிட்டு நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
 • பங்கில்நடைபெறும் விற்பனை விழாவில் எமது அன்பிய உறுப்பினர்கள் தோ்வு செய்தப்பொருட்களை விற்பனை செய்தல்.
 • பனித்தூறல் புத்தகத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் கதைகள், கட்டுரைகள், படங்கள் வரைதல், வினாடிவினா கேள்விகளுக்க விடை கண்டுபிடித்து மதிப்பை வளர்க்கின்றனர்.
 • ஊர், வட்டாரம், மறைமாவட்டம் போன்றவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனர்.
 • பங்கிற்குஉதவி கேட்டு வருபவர்களுக்க எமது அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடையாக கொடுக்கின்றனர்.
 • கொட்டாரம், மணக்குடி பங்கில் ஒருநாள் திருவிழா திருப்பலி கொண்டாடி விருந்துண்டு மகிழ்தல்.
 • சுனாமி நாளை முன்னிட்டு டிசம்பர்-26 மற்றும் நவம்பர்-2 ஆன்மாக்களுக்கு திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ளுதல்.
 • எமதுஅன்பிய உறுப்பினரான திரு. அருள்சுயம்பு அவர்கள் கல்லறை தோட்டத்தை சுத்தமாக வைக்கவும் இரவு வேளையில் மின்விளக்குகளை ஏற்றுதல் போன்ற செயல்களை தன்னார்வமாக செயல்படுகிறார்.
 • பங்கில் செயல்படும் அனைத்து செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்படுதல்.
 • கிறிஸ்து அரசர் திருவிழா திருப்பலியை சேவா சங்க உறுப்பினர்களோடு இணைந்து சிறப்பித்தல்.
 • அன்பியகூட்டமானது ஜெபமாலை சொல்லப்பட்டு மாதா பாடல் பாட பரிசுத்தாவி பாடலுடன் ஆரம்பமாகும். அறிக்கை வாசிக்கப்படும், விவிலியம், அடித்தளம், வாசிக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படும். பத்திரிகை செய்தி கூறப்படும்.