BCC 5 St. Child therese

புனித குழந்தை தெரசம்மாள் அன்பியம்

அன்பிய எண் : 5

    அன்பிய பெயர்: புனித குழந்தை தெரசம்மாள் அன்பியம்
    கூடும் நாள்: ஞாயிறு
    கூடும் இடம்: திரு.இராஜசேகரன் இல்லம்
    கூடும் நேரம் : மாலை 6.30 மணி
    மொத்த குடும்பங்கள் : 27

நிர்வாகிகள்

தலைவர்: திரு. அலெக்ஸாண்டர்
    துணைத்தலைவர்: திருமதி. ஞான சௌந்தரி
    செயலர்: செல்வி. ஹெனிட் ராணி
    துணைச்செயலர் : திரு. பிரைட்
    பொருளர்: திருமதி. செலின் ஆன்றனி ஹெமல்டா

அன்பியம் செயல்படும் விதம் :

ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத் தலைவரை தோ்ந்தெடுத்து அவர் தலைமையில் கூட்டம் நடைபெறும். வருகை பாடலுடன் ஆரம்பமாகும். அதை தொடர்ந்து அடித்தளம் வாசித்து விளக்கங்கள் பரிமாறப்படும். மனதை தொட்ட வசனம் கூறுதல் அதை தொடர்ந்து அறிக்கை வாசித்து ஒப்புதல் பெறப்படும். நற்செய்தி வாசிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களாலும் விளக்கங்கள் கூறப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் அன்பிய உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமண நாள், விழாக்களை சிறப்பாக கொண்டாடி அவர்களை மகிழ்வித்து வருகிறோம். கதை, கட்டுரை, ஜோக்ஸ், மருத்துவ குறிப்பு, பேப்பர் நியுஸ் போன்றவற்றை பயன்படுத்தி குழந்தைகளின் அறிவு திறனை மேம்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் அருட்சகோதரியின் பங்கேற்பும் அவர்கள் தரும் செய்தியும் எங்களை செம்மைப்படுத்த வழிகோலுகின்றது. அருட்சகோதார் மற்றும் பங்குத்தந்தையின் வருகை தரும் செய்தி எங்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைகிறது. மாதா பாடல் பாடுவோம் பின் வருகை பதிவு எடுக்கப்படும். பொருளர் கணக்கு வாசிப்பர்கள். சந்தா பிரிக்கப்படும். ஜெபம் செய்யப்பட்டு நன்றி பாடல் பாடி கூட்டம் 8.00 மணி அளவில் இனிதே நிறைவு பெறும்.

திட்டங்கள் :

  1. அன்பிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று ஜெபிப்பது.
  2. நோயாளிகளை சந்தித்து அவர்களுக்காக ஜெபித்து ஆறுதல் கூறுதல்.
  3. வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல்.
  4. சரக்கு பெட்டகம் தொடர்பாக நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுதல்.

எமது அன்பிய சிறப்பு செயல்பாடுகள் :

  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 2500/-ரூ  அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து  மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
  • 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 500/-ரூ கொடுக்கப்பட்டது.
  • எங்கள் அன்பியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு திருமணநாள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கொண்டாடப்படுகிறோம்
  • ஒவ்வொரு வாரமும் சிறுவர்களுக்கும், பெரியவர்களும், மனப்பாடமாக மனதை தொட்ட வசனம் அன்பியத்தில் வந்து கூறுவார்கள்.
  • குழந்தைகளின் அறிவுதிறன் மேம்பட குழந்தைகளுக்கு வினாடிவினா வைத்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குகிறோம்.
  • ஒவ்வொரு வாரமும் கூட்டத்தை ஒரு குடும்பம் தலைமை ஏற்று நடத்துவார்கள் அதற்கு முன் தயாரிப்புடன் வருவார்கள். அறிவு பூர்வமாக கதைகள் கூறுவார்கள். அதிலிருந்து கருத்துக்கள் பகிர்ந்துகொள்வோம்.
  • புனிதர்களின் மேன்மை பற்றி எங்கள் அன்பிய குழந்தைகளுக்கு கூறுகிறோம்.
  • செய்தி தாள் தகவல்கள் பற்றி விவாதிப்போம்.
  • அந்தந்த பருவ சூழல்களுக்கு ஏற்ப மருத்துவ குறிப்புகள் கூறப்படுகின்றன.
  • ஜெபமாலையின் அர்த்தங்கள் மற்றும் முக்கியத்துவம் அறிய அன்பியம் தொடங்குவதற்கு முன்பாக 10 மணி ஜெபமாலை செய்கிறோம்.
  • எங்கள் அன்பிய உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு தோட்டம் அமைத்துள்ளனர்.
  • மணக்குடி குருசடி அசனத்திற்காக ரூ.840/- வழங்கப்பட்டது.
  • ஒவ்வொரு வருடமும் எங்கள் அன்பிய பாதுகாவலி குழந்தை தெரசம்மாள் திருவிழாவை எங்கள் அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சிறப்பிக்கிறோம். திருப்பலி முடிந்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்குகிறோம்.
  • சரக்கு பெட்டக போராட்ட நிகழ்வுகளில் எங்கள் அன்பிய உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
  • கொட்டாரம் கோவில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கினோம்.
  • நமது அருட்சகோதரிகள் நடத்தும் மனவளர்ச்சி குன்றிய மாணவ பள்ளிக்கு சென்று எம் உறுப்பினர்கள் மதிய உணவூட்டுகின்றார்கள்.
  • திருச்சிலுவை கல்லூரி மாணவிகள் நடத்திய "விழுதுகள் 2017" விழிப்புணர்வு முகாமில் எமது அன்பியத்தை சார்ந்த சிறுவர்களும், பெரியவர்களுமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • அன்பியத்தின் 1000மாவது கூட்டத்தினை சிறப்பாக கொண்டாடினோம். சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும், வசன போட்டி, மற்றும் கலைநிகழ்ச்சிகள் வைத்து மகிழ்ந்தோம். எங்களோடு எம் பங்குத்தந்தை ராஜன் அவர்களும், அருட்சகோதரர் ஜெரோம் அவர்களும் கலந்து கொண்டனர்.
  • 22/1/2018 அன்று பனிமய அன்னை மண்டபத்தில் வைத்து "மீண்டு எழும் குமரி" என்ற மையக்கருத்தில் தொழில்பயிர்ச்சி முகாம் நடைபெற்றது இதில் எம் அன்பிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • பெரிய வியாழன் அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் எம் உறுப்பினர் திருமதி. செலின் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினார்.
  • தவக்காலத்தை முன்னிட்டு ஏழை குடும்பங்களுக்கு திரு. சகாய ஸ்டாலின் குடும்பத்திற்கு 1000/-ரூபாயும், திரு. ஆன்றனி குடும்பத்திற்கு 5கிலோ அரிசி, தேங்காய். ஒரு விதவை குடும்பத்திற்கு துணி ரூ.500/-, அரிசி 25 கிலோ கொடுக்கப்பட்டது.
  • கிறிஸ்மஸ் மரவிழா நடத்தி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்பிய மக்களின் அன்பை பகிர்ந்து கொள்ள வீடுகளில் செய்த பண்டங்களை கொண்டுவந்து பகிர்ந்து உறவை வளர்க்கிறோம்.
  • மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு ஆண்டுவிழாவின்போது அன்பியம் சார்பாக 800ரூ கொடுத்தோம்.
  • எங்கள் அன்பியத்தில் திருமணமாகி செல்லும் பெண்களுக்கு பரிசுகள் வாங்கி கொடுத்து மகிழ்கிறோம்.
  • 23. கொட்டாரம் கோவில் அசன விழாவிற்க ரூ.1000/- கொடுத்தோம்.
  • ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் குடில், கிறிஸ்மஸ் மரம், வினாடிவினா, விளையாட்டு போட்டி, குலுக்கல் பரிசு போன்ற நிகழ்வுகள் நடைபெறும். அந்நாளில் ஒரு விதவை ஏழ்மை குடும்பத்தை தோ்ந்தெடுத்து பண உதவி, அரிசி, தேங்காய், துணி வழங்கி சிறப்பித்து வருகின்றோம்.
  • தவக்காலங்களில் அன்பியத்தில் சிலுவை பாதை செய்து தவ முயற்சிகளை மேற்கொள்வோம். ஏழைகளுக்கு பிடி அரிசி திட்டம் மூலம் அரிசி வழங்கி வருகிறோம்.
  • ஜெபமாலை மாதங்களில் எல்லா குடும்பங்களும் இணைந்து அன்பியத்தில் ஜெபமாலை செய்து அன்னையின் தியாகத்தை புகழ்வோம்.
  • திருவிழா காலத்தில் எமது அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து திட்டமிட்டு திருப்பலி சிறப்பித்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம்.
  • நமது பங்கில் செயல்பட்டு வரும் மாற்று திறனாளி செல்ல குழந்தைகளுக்கு உணவு ஊட்ட எமது அன்பியத்திற்க தரும் நாட்களில் அதை செயல்படுத்தி வருகிறோம்.
  • எமது அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சேல்ஸ்டே கொண்டாடி வருகிறோம்.
  • அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் விதமாக அனைத்து குடும்பங்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் ஜெபம் செய்து வருகிறோம்.
  • எமது அன்பியத்தில் நோய்வாய்பட்டு வீட்டில் இருக்கும் உறுப்பினரை சந்தித்து ஜெபம் செய்து ஆறுதல் கூறி வருகின்றோம்.
  • ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி செய்து வருகிறோம்.
  • அன்பிய திருப்பலி நிறைவேற்றி அனைவரும் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி விருந்து உண்டு மகிழ்கின்றோம்.