புனித யூதாததேயுஸ் அன்பியம்
அன்பிய எண் : 6

- பங்கு: தென்தாமரைகுளம்
- கூடும் இடம்: புனித ஜார்ஜியார் குருசடி
- கூடும் நாள்: ஞாயிறு
- கூடும் நேரம்: மாலை 6:30 மணி
- மொத்த குடும்பங்கள்: 32
நிர்வாகிகள்
- தலைவர் : திரு. கிங்ஸ்லின்
- துணைத்தலைவர் : திருமதி. ஜாய்ஸ்
- செயலர் : திருமதி. அல்பியா
- துணைச்செயலர் : திருமதி. கிறிஸ்டல் ரீட்டா மேரி
- பொருளர் : திருமதி. செலின் மேரி சுபிதா
எதிர்காலத் திட்டம் :
அன்பியத்திற்கு வராமல் இருக்கும் குடும்பங்களை சந்தித்து அவர்களை அன்பியத்திற்கு வருமாறு ஊக்குவிக்க வேண்டும் என்று திட்டம் போடப்பட்டது.

சிறப்பு செயல்பாடுகள்:
- 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 5000/-ரூ அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
- 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1800/-ரூ கொடுக்கப்பட்டது.
- நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற ஆத்துமாக்கள் திருவிழாவிற்கு மாற்று திறனாளிகள் செய்த மாலைகள் வாங்கினோம்.
- கிறிஸ்துபிறப்பு விழாவை முன்னிட்டு அன்பியத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டடினோம். விளையாட்டுப்போட்டிகள் வைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தோம்.
- விற்பனை விழாவை முன்னிட்டு சுண்டல், காபி விற்பனை செய்து ரூ. 3000/- நமது மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கு கொடுத்தோம்.
- எங்கள் அன்பியத்திற்கு குறிக்கப்பட்டுள்ள நேரங்களில் கான்வென்ட்டுக்கு உணவூட்ட எமது அன்பிய மக்கள் தவறாது செல்கின்றனர்.
- தவக்கால உண்டியல் வழியாக 5930 ரூபாய் கொடுத்தோம். ஏழை உதவி நிதியாக எமது அன்பியத்திலுள்ள திருமதி ஸ்டெல்லா அவர்களுக்கு ரூபாய் 1300/- மற்றும் தேங்காய் அரிசி கொடுத்தோம்.
- கொட்டாரம் அசனத்திற்கு 1500/- வழங்கினோம். மணக்குடி அசனத்திற்கு ரூபாய் 1000/- வழங்கினோம்.
- குருத்து ஞாயிறு பவனிக்கு எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் அனைவரும் இணைந்து தெருக்களை சுத்தப்படுத்தி குருத்து ஓலை தோரணங்களை கட்டினோம்.
- எமது அன்பிய இறைமக்கள் அனைவரும் இணைந்து வர்த்தக பன்னாட்டு சரக்கு முனையத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டோம்.
- அன்பிய மண்டல அளவில் நடத்தப்பட்ட கிறிஸ்மஸ் விழாவில் அன்பிய உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாம்பன் விளை, கன்னியாகுமரி நமது பங்கில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளிக்கு உதவி தொகை வழங்கினோம்.
- கிறிஸ்மஸ் விழா அன்பியத்தில் கொண்டாடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், கிறிஸ்மஸ் ஹிப்ட் ஒவ்வொருவரும் பரிமாறியும், கிறிஸ்மஸ் கேக் வெட்டியும், கிறஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
- வருடந்தோறும் நமது பங்கில் நடைபெறும் விற்பனை விழாவில் பங்கெடுத்து ஏழைகள் நிதிக்கான சிறுதொகையை வழங்கி வருகிறோம்.
- சிறு பிள்ளைகளுக்கு விவிலிய அறிவை வளர்க்கும் விதமாக விவிலிய வினாடி வினா ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறோம். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வருகிறோம்.
- வருடந்தோறும் அன்பியத்தின் சார்பாக அன்பியம் கூடும் இடத்தில் சிலுவைப் பாதை நடத்தி வருகிறோம்.
- ஜெபமாலை மாதமான அக்டோபர் மாதத்தில் அன்பியத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சென்று ஜெபமாலை ஜெபித்தோம்.
- அன்பியத்தில் திருப்பலி வைத்து பின் எல்லோரும் சோ்ந்து அன்பின் விருந்து கொண்டாடி மகிழ்ந்தோம்.
- அன்பியத்தில் உள்ள நோயாளிகளின் குடும்பங்களுக்காக சிறப்பு ஜெபமாலை எப்படி செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்பட்டது.
எதிர்காலத் திட்டம் :
அன்பியத்திற்கு வராமல் இருக்கும் குடும்பங்களை சந்தித்து அவர்களை அன்பியத்திற்கு வருமாறு ஊக்குவிக்க வேண்டும் என்று திட்டம் போடப்பட்டது.