புனித சவோியார் அன்பியம்
அன்பிய எண் : 7

- பங்கு: தென்தாமரைகுளம்
- கூடும் இடம்: அகஸ்டின் தெரு கடைசி முனை
- கூடும் நாள்: ஞாயிறு
- கூடும் நேரம்: மாலை 6:30 மணி
- மொத்த குடும்பங்கள்: 33
நிர்வாகிகள்
- தலைவர்: நேவிஸ்
- துணைத்தலைவர்: பேபி சாந்தா
- செயலர்: மேரி கவிதா
- துணைச்செயலர்: ஆனி மீரா
- பொருளர்:ஆட்லின் வில்லியம் ஒய்ஸ

கூட்டம் நடைபெறும் முறை :
எங்கள் அன்பிய கூட்டமானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் சுமார் 6.00 மணியளவில் பரிசுத்த ஆவி பாடலுடன் ஆரம்பமாகும். கூட்டத்தலைவரால் ஒவ்வொரு வாரமும் வருகைப்பதிவு எடுக்கப்படும். சிறப்பு விருந்தினராக இரண்டு அருட்சகோதரிகள் கலந்து கொண்டு தேவையான விவிலிய விளக்கங்களை அளிப்பார்கள். கூட்டச்செயலரால் அறிக்கை வாசிக்கப்பட்டு முழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்புதல் பெறப்படும். பொருளர் அறிக்கை வாசிக்கப்பட்டு நிதிநிலை விவரம் பகிர்ந்து கொள்ளப்படும்.
செயல்பாடுகள் :
- 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 3500/-ரூபாயும், 3சேலை, 3சுடிதார், 7 துணி, நைட்டி, சட்டை, லுங்கி அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.
- 16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 900/-ரூபாயும், 28 தேங்காயும் கொடுக்கப்பட்டது.
- மாதா சுரூபம் பவனி வருவதற்காக ஜார்ஜியார் குருசடியில் அலங்காரம் மற்றும் தயாரிப்புக்கள் செய்தோம்.
- கொட்டாரம் ஆலய அசன விருந்துக்காக ரூபாய் 1000/- நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
- 1/12/2017 கிறிஸ்துப் பிறப்பு பஜனைக்கு வந்தவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- கீழ்மணவை திருவிழா திருப்பலியில் அன்பியமாய் இணைந்து சென்றோம்.
- இளம் தொழிலாளர் இயக்கம் நடத்திய வினாடி வினாப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு ரூ.2000/- பெற்றோம்.
- திருமணத் தம்பதியர் குடும்பமாக சிறப்பித்த மறைமாவட்ட அன்பிய குடும்ப விழாவில் வாசகங்கள், முன்னுரைகள் வாசித்து சிறப்பித்தோம்.
- விற்பனை விழாவில் கிடைத்த ரூ.3200/- செல்லக்குழந்தைகளுக்கு வழங்கினோம்
- பன்னாட்டு சரக்கு மாற்று முனையப் பெட்டக எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
- HIVநோயாளி ஒருவருக்கு ரூ.1000/- அன்பிய உறுப்பினர் ஒருவர் கொடுத்துள்ளார்.
- பிளாஸ்டிக் ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- அன்பிய வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டது.
- குருத்தோலை பவனிக்காக ஒதுக்கப்பட்ட இடம் சுத்தம் செய்து அலங்கரித்தோம்.
- பெரிய வியாழனன்று அன்பிய மக்கள் இணைந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். அன்று 20 கிலோ அரிசி மற்றும், தேங்காய், ரூ.1000/- ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
- அருட்பணி. ஜெரோம் அவர்களின் முதல் நன்றி பலியில் அன்பியமாக இணைந்து சென்றோம்.
- ரூ.500/- கல்வி நிதியாக ஏழை மாணவிக்கு வழங்கப்பட்டது.