BCC9 St. Joseph

தூய சூசையப்பர் அன்பியம்

அன்பியம் : 9

கூடும் நாள் : ஞாயிறு
கூடும் நேரம் : மாலை 6.00 மணி
கூடும் இடம் : திரு. அருள்தாஸ் இல்லம்
மொத்த குடும்பங்கள் : 24
வழிகாட்டிகள் : பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகள்

நிர்வாகிகள் :

தலைவர் : திருமதி. விஜய பமிலா
செயலர் : திருமதி.மோி சோனி சுபா
பொருளர் : செல்வன். ஜாம்சன் பாபு
வழிபாட்டுக்குழு உறுப்பினர் : செல்வி.அப்சரா ஸ்னோலி
பங்குப்பேரவை உறுப்பினர் : செல்வன். ஜாம்சன் பாபு
விவிலியப்பணிக்குழு : திருமதி.மோி சோனி சுபா
குடும்ப நலப்பணிக்குழு : திரு. வறுவேல் அந்தோணி, திருமதி.ஜெயஷீலா

நோக்கங்கள் :

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கருத்துக்களை பகிர்ந்து, அறிவை வளர்த்து குடும்பமாக ஜெபித்து அன்பில் உறவாடி மகிழ்ந்திருப்பது, தேவையில் இருக்கும் மக்களுக்கு பொருளுதவியும், மன ஆறுதலும் கொடுப்பது.

செயல்பாடுகள் :

1. அன்பியத்தில் குழந்தைகளின் ஒற்றுமையுணர்வு, தன்னம்பிக்கை, திறமைகளை ஊக்குவிக்கும் விதத்தில் சிறு சிறு கதைகள் சொல்லி அதன் மூலம் உற்சாக மூட்டுகிறோம். மற்றும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள், பொது அறிவை வளர்க்கும் செய்திகள் கூறப்படுகின்றன.
2. அன்பிய மக்களின் உணர்வுகளை புரிந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கின்றோம். துன்பப்படுவோர்க்கு ஜெப உதவிகள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றோம். பிறந்தநாள், திருமணநாள்களில் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து ஜெபித்து மகிழ்கிறோம். இவ்வாறாக நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அன்புடனும், ஒற்றுமையுடனும் மற்றவர்களுக்கு முன்மாதிரிகைகளாக வாழ்கின்றோம்.
3. திருவிழா நாட்களில் மற்ற அன்பியங்களுடன் இணைந்து திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகளை நல்ல முறையில் சிறப்பிக்கின்றோம்.
4. வழிபாட்டுக்குழு,பங்குப்பேரவை, விவிலியக்குழு, அன்பிய ஒழுங்கிணைப்பு கூட்டம், குடும்பநல பணிக்குழு போன்ற கூட்டங்கள் மற்றும் வட்டார கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டு பங்குத்தந்தையின் வழிகாட்டுதலோடும், கீழ்படிதலோடும் கூட்டங்களில் சொல்லப்படும் செய்திகளை மக்களுக்கு அறிவித்து நேரங்களை பயனுள்ள விதமாய் அமைத்து கொள்கிறோம்.
5. அன்பிய குடும்பங்களுக்காகவும், நாட்டிற்காகவும், நமது பங்கின் வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு வாரமும் 10 மணி ஜெபமாலை ஜெபிக்கப்பட்டு வருகின்றது. நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றோம். விவிலியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கப்பட்டு தியானித்து வருகின்றோம். "உங்களது வலக்கை கொடுப்பதை, இடக்கை அறியாதிருக்கட்டும்"என்ற கூற்றிற்கு ஏற்ப எங்கள் அன்பிய மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேண்டியவர்களுக்கு உதவிகளை செய்கின்றனர்.
6. ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் எம்அன்பிய மக்களை தொடர்பு கொண்டு அன்பு விருந்தில் கலந்து கொண்டு பேசி உறவாடி எங்கள் உறவுகளை சிறப்பான முறையில் வளர்த்து வருகின்றோம்.