மறைக்கல்வி மன்றம்
“மகிழ்ச்சி என்னும் மணிமுடி சூடி மனித நேயம் மலர உழைக்கும்
எழுச்சி மிகு இளையோராய் மாணவர்கள் எழுந்து நடந்திட
ஊன்று கோலாய் திகழ்வதே எம் மறைக்கல்வி மன்றம்”
நோக்கம்
கிறிஸ்துவின் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்குதல் என்ற ஒட்டு மொத்த நோக்கோடு மாறி வரும் காலசூழ்நிலையில் மாணவர்கள் சரியான திசையை கண்டறிந்து கொள்ளுவதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கு உதவுதலும் தென்தாமரைகுளம் மறைக்கல்வி மன்றத்தின் நோக்கம்.எம் பங்கு கீழ்மணக்குடி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்ட காலத்திலிருந்தே மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்பொழுது L.K.G முதல் 15-ம் வகுப்பு வரை மொத்தம் 18 வகுப்புகள் நடைபெறுகின்றன. சுமார் 160 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கோட்டாறு மறைமாவட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அருட்சகோதரி மூன்று பேருடன் சேர்த்து பெண்கள், ஆண்கள் என மொத்தம் 22 ஆசிரியர்கள் ஆர்வத்தோடுபணிபுரிகின்றனர்.
- பெற்றோர் மறைக்கல்வி வகுப்பை பங்குத்தந்தை நடத்துகிறார்.
- ஓவ்வொரு ஞாயிறும் பிற்பகல் 3.00 மணிமுதல் 4.00 மணிவரை வகுப்பு நடைபெறுகிறது. ஆசிரியர்கள்,பாடக்குறிப்புகள் தயாரித்து பங்குத்தந்தையின் ஒப்புதல் பெற்று நடத்துகின்றனர்.
- ஆசிரியர்கள் இணைந்து ஓராண்டிற்கான செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- ஒரு வருடத்திற்கான உத்தேச வரவு செலவு கணக்கு தயாரிக்கப்பட்டு நிதி நிர்வாகம் நடைபெறுகிறது. மாதந்தோறும் கணக்கு வாசிக்கப்படுகிறது. உள் தணிக்கை செய்யப்படுகிறது.
- மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுகிறது.
தலைவர் திருமதி. சாந்தி மெற்றில்டா
செயலர் செல்வி.A . புனிதா
துணைச் செயலர் திருமதி.M. மெர்லின் ஜோஸ்
பொருளர் திரு.M. மைக்கிள்
துணைப் பொருளர் திரு.Y.M. ஆன்றனி







செயல்பாடுகள்
- மாதத்தின் முதல் ஞாயிறு பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை பங்குத்தந்தையின் தலைமையில்ஆசிரியர் கூட்டம் நடைபெறுகிறது.
- மாணவ மாணவியரின் கலைத்திறமையை வளர்ப்பதற்காக வருடத்திற்கு 2 முறை மன்ற விழாநடத்தப்படுகிறது.
- விவிலிய ஞாயிரை சிறப்பிக்கும் விதமாக மறைக்கல்வி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட விவிலிய கண்காட்சிஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.
- மாணவர்களுக்கு பொது அறிவு, விவிலிய அறிவு வளர்வதற்கு வருடத்திற்கு 2 முறை வினாடிவினா போட்டிநடத்தப்படுகிறது.
- மாணவர்களிடம் சேமிப்பு பழக்கம் உருவாக்கும் விதத்திலும், மன்ற வளர்ச்சி நிதிக்காகவும் கடந்த 17 வருடங்களாக சிறுசேமிப்பு திட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் பங்கு மக்களின் இல்லங்களை சந்தித்து கிறிஸ்மஸ் பஜனை பாடல்கள் பாடி பெற்றுகொண்ட நன்கொடைகளை எங்களது மாற்றுத்திறனாளிகள் பள்ளி வளர்ச்சிக்கு வழங்கி வருகிறோம்.
- ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் மரவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
- மே மாதம் முதல் வாரம் விடுமுறை விவிலியப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறது. மறைமாவட்டம்அறிவுறுத்தும் 10 அம்ச திட்டங்கள் அடிப்படையில் குறும்படங்கள், படக்காட்சிகள், விளையாட்டு, பாடல்கள் எனவிவிலியக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. தினமும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
- மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண், பெண் என 2 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅவர்கள் மாணவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து ஆசிரியர் கூட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.
- மாணவர்களின் பார்வைகளை விசாலப்படுத்த ஆண்டுதோறும் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து செல்கிறோம்.
- இறை இரக்க ஆண்டை முன்னிட்டு 30-09-2016 அன்று தலக்குளத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள்இல்லத்திற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் சென்று வந்தது இரக்க உணர்வை வெளிப்படுத்தும் விதமாகஅமைந்திருந்தது.
- மறைக்கல்விக்கென வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலையில் மாணவர்கள் வசதியாக அமர்வதற்கு 150 இருக்கைகள் பங்குப்பேரவையுடன் இணைந்து வாங்கப்பட்டது. அதற்கான செலவில் 40% அதாவது ரூ 27400/- ஐமறைக்கல்வி மன்றம் வழங்கியுள்ளது.
- மறைக்கல்வி வகுப்பில் துணைக்கருவியாக பயன்படுத்தவும், பயிற்சிகளுக்கு பயன்படுத்தும் நோக்கோடும்மடிக்கணினி, LCD Projector, மற்றும் Screen சேர்த்து ரூ.65,000/- செலவில் வாங்கப்பட்டது.
- LCD Projecter பயன்படுத்தி மாணவர்களுக்கு கருத்தாழமிக்க குறும்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. Power Point தயாரிப்பு முறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- ஆண்டிற்கொருமுறை பங்களவில் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கும், கலைப்போட்டிகளில்வெற்றி பெறுபவர்களுக்கும் பங்கின் பாதுகாவலி விழாவில் நடைபெறும் மறைக்கல்வி ஆண்டு விழாவில் பரிசுகள்கொடுத்து ஊக்குவிக்கின்றோம்.
- மறைமாவட்டம் நடத்தும் தேர்வில் வருடம் தோறும் மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெறுகின்றனர்.
- ஆசிரியர்களும், மாணவர்களும் திருப்பலிக்கு விவிலியம் எடுத்து வர வலியுறுத்தப்படுகிறார்கள்.
- மறைமாவட்ட “திருப்புமுனை” சிறப்பு பணிக்குழு நடத்தும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சியில் மறைக்கல்வி மன்றஆசிரியர் இருவர் கலந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
- வருடம் தோறும் பாதுகாவலர் விழாவின் போது நடைபெறும் முதல் திருவிருந்து விழாவிற்கும் உறுதிபூசுதல்அருட்சாதனம் பெறவும் ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.
- அனைத்து ஆசிரியர்களும் பொதுநிலையினருக்கான அஞ்சல் வழி இறையியல் கல்வி பயின்று வருகின்றனர். பங்குத் தந்தை அந்த பயிற்சியை அளிக்கின்றார்.
- தற்போதுள்ள மறைக்கல்வி அலுவலகம் சுமார் ரூ. 80,000/- செலவில் புதுப்பிக்கப்பட்டது.
- ஆலயத்திற்கு வர்ணம் பூச மறைக்கல்வி மன்ற நிதியிலிருந்து ரூ.10,000/- வழங்கப்பட்டது.
- நூலகத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்க ரூ.29,000/- மறைக்கல்வி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது.
- மாணவர்களின் நிறைகுறைகளை அறியவும் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கோடு பெற்றோர் ஆசிரியர்இணைந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
- வருடம் தோறும் குருத்து ஞாயிறு பவனியை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தி வழிநடத்தி வருகிறோம்.
- தமிழர் திருநாளாம் பொங்கல்விழா திருப்பலியை மறைக்கல்வி மன்றம் வருடம் தோறும் சிறப்பித்துமகிழ்கிறோம்.
- மறைக்கல்வி வகுப்பிற்கு வராத மாணவ மாணவியரின் பெற்றோர்களையும் மாணவர்களையும் ஆசிரியர்கள்வீடுவீடாக சென்று சந்தித்து கலந்துரையாடி வகுப்பிற்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
- வருடம் தோறும் பங்கில் நடைபெறும் விற்பனை விழாவின் போது விளையாட்டுப் போட்டிகளை நடத்திக்கொடுக்கிறோம்.
- புத்தாண்டு அன்று மாலையில் மறைக்கல்வி மன்றம் சார்பில் சிறப்பான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவிற்பனை தினத்தன்று நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கான பரிசுகளை வழங்குகிறோம். பங்குபேரவைபரிசுகளுக்கான செலவினை ஏற்றுக் கொள்கிறது.
எதிர்கால திட்டங்கள்
- மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி அளித்தல்.
- மாணவர்களிடையே போதை விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.