நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி.M.C ராஜன் அவர்களின் குருத்துவ பணி வாழ்வின் 25 வது வருடம் நடைபெறுகிறது, தனது அன்பால் மக்களின் மனதில் இடம் பிடித்த நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி. ராஜன் அவர்களின் வெள்ளிவிழாவை நமது பங்கு மக்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி தொடங்கி வைத்தனா்

தந்தை அவர்களே!
எளியவர்களுக்கானவர்
நீங்கள்!
துன்பத்தில் வாடுவோரின்
துயர் நீக்க
தளர்ந்ததில்லை
நீங்கள்!
சமூக நீதிக்காக
குரலெழுப்ப
தயங்கியதில்லை
நீங்கள்!
கடந்து செல்லுகின்ற
எல்லாக் காலங்களிலும்
நறுமணம் வீசும்
வாடா மலர் நீங்கள்!
தடைகளையெல்லாம்
தகர்த்தெறியும்
தொடர் பயிற்சி
நீங்கள்!
வறண்டு போன
இதயங்களிலெல்லாம்
ஈரத்தைக் கொண்டு
வந்தவர்கள் நீங்கள்!
வாழ்த்துகிறோம்!
உங்கள்
இலட்சியப் பயணம்
இனிதாகத் தொடர்ந்திட………………..