புதிய விடியல் AA குழு
குடியில் அவதிப்படும் குடும்பங்களுக்கு விடிவு உண்டு என்பதை செயல்பாட்டிலும் எடுத்துக்கூறுவதே AA குழுவின் அடிப்படை நோக்கம். எம் பங்கில் குடியால் அவதிப்படும் மனிதர்களும், குடும்பங்களும் பல உள்ளன. குடும்ப அமைதியின்றி, நோய், வறுமை கடன் போன்ற துன்பங்களால் சூழப்பட்டு வாழ்வை இழக்கும் நிலையில் பல குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றை கண்ட எம்முன்னாள் பங்குத்தந்தை Dr.V.ஹிலாரியுஸ் குடிநோய்க்கு அடிமையான மனிதர்களையும் அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து பேசினார்கள். இதில் பலர் கார்மல் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் குடிநோய் முகாமில் கலந்து கொண்டார்கள். ஆனால் தொடர்ந்து அங்கு சென்று AA-ல் கலந்து கொள்ள இயலவில்லை என கூறினார்கள். எனவே நமது பங்கில் AA துவங்க வேண்டும் என்ற ஆவலில் 31/05/2015 அன்று தந்தை Dr.V. ஹிலாரியுஸ் தலைமையில் அருட்பணி Dr.நெல்சன் முன்னிலையில் இயேசு சபை போதை நோய் பணிக்குழுவினரால் நமது பங்கில் “புதிய விடியல்” என்ற பெயரில் AA குழு ஆரம்பமானது. வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் மாலை 7 மணிமுதல் 8 மணி வரை நமது ஆலய வளாகத்தில் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியே AA பயிற்சி நடைபெற்று வருகின்றது. சிகிட்சை பெற்ற பலரும், குடியை நிறுத்த வேண்டும் என்ற ஆவல் கொண்ட பலரும் இங்கு வந்து பயன் பெற்று செல்கின்றனர். புதியவிடியல் AA குழுவின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் விதத்தில் புதிதாக பங்கு பொறுப்பேற்ற அருட்பணிDr.Fr.M.C.ராஜன் புதிய உத்வேகத்துடன் இப்பணியை மேற்கொள்கின்றார்கள். அதன் வெளிப்பாடாக 21/08/2016 அன்று “புதிய விடியல் AA” குழுவின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பங்குத்தந்தை.Dr.M.C.ராஜன் தலைமை தாங்கினார்கள். கோட்டாறு மறை மாவட்ட போதைநோய் பணிக்குழு திருப்பு முனையின் இயக்குநர் அருட்பணி.அல்காந்தன், கோட்டாறு மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணி இயக்குநர் அருட்பணி.Dr.நெல்சன் இயேசு சபை போதை நோய் பணிக்குழுவினர், AA குழுக்கள் செயல்படும் ஊர்களிலிருந்து AA நண்பர்கள் பங்கு மக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். வரவேற்பு, நடனம், அனுபவ பகிர்வு, வாழ்த்துரை, நன்றியுரை, என நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது. எம் பங்குத்தந்தையின் முயற்ச்சியால் இன்றும் பலகுடும்பங்கள் குடியினால் ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிறைவோடு வாழுகின்றனர்.