பங்குப்பேரவை
எமது பனிமய அன்னை ஆலயத்தின் முதல் பங்கு அருட்பணி பேரவையானது 1990-ம் ஆண்டு அருட்பணி அமிர்தராஜ் அவர்களால் தொடங்கப்பட்டது. இது வரையில் 8 அருட்பணி பேரவைகள் சிறப்புடன் செயல்பட்டு தற்போது 9-வது அருட்பணி பேரவை பணியாற்றி வருகிறது.9-வது அருட்பணி பேரவை
17-01-2016 முதல் செயல்பட்டு வரும் தற்போதைய பங்குப்பேரவையில் அன்பியங்கள் வாயிலாக 12 உறுப்பினர்களும், பக்த சபைகள் இயக்கங்கள் வாயிலாக 8 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்கள் 3 பேரும், பங்குத்தந்தையும் இணைந்து மொத்தம் 24 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இப்பேரவையில் 10 பேர் பெண் உறுப்பினர்கள். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காலை 10 மணிக்கு பங்குப்பேரவை கூட்டம் நடைபெறுகின்றது. பங்குப்பேரவையோடு இணைந்து மறைமாவட்ட விதிமுறைகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிக்குழுவும், தணிக்கைக்குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பேரவையின் கணக்குகள் உள் தணிக்கை செய்யப்பட்டபின் இரண்டாவது வியாழக்கிழமை நிதிக்குழு கூடி கணக்குகளை சரிப்பார்ப்பதுடன் தணிக்கை அறிக்கையையும் ஆய்வு செய்கிறது.அருட்பணி ஜெரி வின்சென்ட்
தலைவர்
திருமதி. ஷீலா ஹென்றி
செயலர்
திரு.சேம்ஜி எமர்சன்
துணை செயலர்
செயல்பாடுகள்
எமது பங்கின் பொன்விழா ஆண்டினை சிறப்பிக்கும் விதமாக சுதந்திர தினவிழா, ஜெபமாலை அன்னை பெருவிழா, கிறிஸ்து அரசா் பெருவிழா, இளைஞர்இயக்க ஆண்டுவிழா என மாதம் ஒவ்வொரு விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வருடம்தோறும் குருத்து ஞாயிறு அன்று அசன விழாவனது கடந்த இரண்டு வருடங்களாக பல்சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.
வருடம் தோறும் விற்பனை தினம் மற்றும் கிறிஸ்மஸ் பஜனை தவக்கால உண்டியல் வழியாக கிடைக்கும் பணத்தை எம் பங்கு அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் மாற்றுதிறனாளி பள்ளிக்கு வழங்கி வருகிறோம்.
எம் பங்கு குடும்ப விழாவின் ஒரு நாள் வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கீழ மணக்குடி இறைமக்கள் சிறப்பிப்பது வழக்கம். கடந்த மூன்று வருடங்களாக அவர்களின் திருவிழாவிலும் ஒரு நாளை நாங்கள் சிறப்பித்து மகிழ்ந்து உறவை வளர்த்து வருகின்றோம்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவன்று பங்கு மக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து உண்டு மகிழ்கின்றோம்.
பங்கு நிதியிலிருந்து பயிற்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தவக்கால தியானங்கள் மாணவர் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி, நஞ்சில்லா வேளாண்மை போன்றவை ஆகும். சிறார், மாணவர் நடத்தும் பயிற்சிகளுக்கு நிதி முழுமையாக வழங்கப்படுகிறது.
வாரம் தோறும் செவ்வாய்கிழமை மாலையில் குடி நோயிலிருந்து விடுதலையடைந்தகுடும்பங்களுக்கு உதவியாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஆல்க்ககாளிக்ஸ் அனானிமஸ் கூட்டம் நடத்தப்படுகிறது.