Celebration

விழாக்குழு

முன்னுரை

தெய்வீகம் தன்னை வெளிப்படுத்தும் தளங்களுள் அதிமுக்கியமானது கலை வடிவம். தமிழன் கடவுளை கலையிலே கண்டான். உலக மொழிகள் உருப்பெரும் முன்னரே இயல், இசை, நாடகம் என விளக்கம் சொன்னவர்கள் தமிழர்கள். கலை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. துயரத்தை பாதியாக குறைக்கிறது. கலைகளில் சிறப்புறுகிற சமூகம், வரலாற்றை தன் வசமாக்கி கொள்கிறது. இந்த கருதுகோளோடு உதித்தது தான் தூய பனிமய அன்னை பங்கின் விழாக்குழு. இளையோரிடையே கலைத்திறனை வளர்த்தெடுக்கும் சிறிய முயற்சியில் இக்குழு செயல்படுகிறது.

விழாக்குழு வரலாறு

பொன்விழா ஆண்டினை சிறப்பாக சிறப்பிக்க நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்குப்பேரவையோடு இணைந்து செயல்பட 10 துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று தான் எமது தூய பனிமய மாமா ஆலய விழாக்குழு. பங்கில் நடைபெறும் விழாக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பாக நடைபெற இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்:

 • விழாக்களின் தரத்தை மெருகேற்றி தொய்வில்லாமல் நடைபெற உதவி செய்தல்.
 • பங்கு விழாக்களை குடும்ப உணர்வோடு பங்கெடுக்க துணைபுரிதல்.
 
கூடும் இடம்        : அன்னை அறிவாலயம்
கூடும்நாள்         : மாதத்தின் இரண்டாம் ஞாயிறு
கூடும் நேரம்        : ஞாயிறு மாலை 5.00 மணி
குழு உறுப்பினர்கள்     : 9 போ்
இயக்குநர்         : அருட்பணி. M. கிறிஸ்து ராஜமணி
பங்குப்பேரவை தொடர்பாளர் : A. ஆன்றனி ஆக்னஸ்

உறுப்பினர்கள் :
திரு. M.L ஜாண்சன்

திரு. அருள்ராஜ்

திரு. சேவியர்

செல்வி. ஜாண்சி

திருமதி. சாந்தி

திருமதி. எமிலியா கிறிஸ்டி

திருமதி. செலின் ஹெமல்டா

திருமதி. அனுஷியா

விழாக்குழுவின் விதிமுறைகள்

 1. கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
 2. திரைப்பட பாடல்கள் மற்றும் பிற மொழி பாடல்கள் கருத்தின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும்
 3. நடனத்தின் போது பலவகையான பொருட்களை (Properties) பயன்படுத்தி ஆட வேண்டும்.
 4. விழாக்குழுவால் தணிக்கை செய்யாத பாடல்கள் எக்காரணத்தைக் கொண்டும் அரங்கேற்றப்பட மாட்டாது.
 5. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இருமுறை ஒத்திகை பார்க்கப்படும்.
 6. கலைநிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் வரிசையாக நடைபெற வேண்டும்.
 7. கலை நிகழ்வுகளில் ஒலிக்கப்படும் பாடல்கள் அனைத்தும் ஒத்திகையின் போது Media குழுவிடம் ஒப்படைக்க பட வேண்டும்.
 8. இறைவணக்கப் பாடல்கள், வரவேற்புரை, நன்றியுரை, நிகழ்ச்சி நிரல் அனைத்தும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
 9. விழாக்காலங்களில் சிறப்பிக்கின்றவர்கள், கலையரங்கத்தை நோ்த்தியாக அலங்கரிக்க வேண்டும்.
 10. குறிப்பிட்ட நேரத்தில் கால தாமதமில்லாமல் நிகழ்ச்சிகளை துவங்கி முடிக்க வேண்டும்.
 11. கலைநிகழ்ச்சிகள் குறிப்பிட்ட மையக்கருத்துடன் பொருந்தி இருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளில் பங்கு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சிறப்பிக்கும் விழாக்கள்

 1. ஜனவரி 1 : ஆங்கில புத்தாண்டு
 2. ஜனவரி 26 : குடியரசு தின விழா
 3. ஜூலை 27 : கொடியேற்றம் முதல் 10-ம் திருவிழா வரை
 4. ஆகஸ்டு 15: தேவமாதா விண்ணேற்பு திருவிழா
 5. டிசம்பர் 25 : கிறிஸ்துமஸ்
 6. டிசம்பர் மணக்குடி திருவிழா
 7. டிசம்பர் வியாபாரச் சந்தை

திட்டங்கள்:

 1. விழாக்களை மெருகேற்றுதல். தொய்வில்லாமல் நடைபெற உதவுதல்.
 2. திருவருகை காலம் முதல் கிறிஸ்து அரசர் திருவிழா வரை எல்லா திருவிழாக்களையும் தயார் செய்தல்.
 3. கலைநிகழ்ச்சியின் போது பாடல்கள் தணிக்கை செய்யும்போதும் விழாக்குழு தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு சில நிபந்தனைகளை வகுக்க வேண்டும்.

செயல்பாடுகள்

 • 30/12/2017 அன்று நமது பங்குமக்களால் சிறப்பிக்கப்பட்ட மணக்குடி திருவிழா கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
 • 26/1/2018 அன்று விடியல் இளைஞர் இயக்கத்தால் சிறப்பிக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகள் விழாக்குழுவால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நடைபெற்றது.
 • பாலர் சபை சிறுவழி இயக்கத்தினர் சிறப்பித்த ஆண்டு விழாவிற்கான பாடல்கள் விழாக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டது.
 • பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் தங்களது ஆண்டுவிழாவை 1/4/2018 அன்று சிறப்பித்தார்கள். அதற்குரிய கலைநிகழ்ச்சிக்கான பாடல்கள் விழாக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டது.
 • மணக்குடி திருவிழா கலைநிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற விழாக்குழு பொிதும் பங்கு வகிக்கிறது. பாடல்கள் தணிக்கை செய்யப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் இரண்டு ஒத்திகையின் மூலமாக சரிபார்க்கப்பட்டு, தரம் குறைந்த கலைநிகழ்ச்சிகள் நீக்கப்பட்டன. கலைநிகழ்ச்சியானது, குறிப்பிட்ட நுரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்தது சிறப்பானது ஆகும். மேலும் ஜனவரி 26 குடியரசு தினத்தை சிறப்பானதாக சிறப்பிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.