Development

வளர்ச்சிக்குழு

"வளர்ச்சி என்றும் வளர்ச்சி, வாழ்வில் இல்லை தளர்ச்சி"
பொன்விழா ஆண்டினை சிறப்பிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட 10 துணைக்குழுக்களில் ஒன்று வளர்ச்சிக்குழு ஆகும்.

நோக்கம் :

பங்கு மற்றும் பங்குமக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குதல். நிலம் வாங்குதல், அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், கட்டிடங்கள் பராமரிப்பு, முதியோர் இல்லம் அமைத்தல்.... இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளை முன்னின்று செயல்படுத்துவதே எம் நோக்கம்.

உறுப்பினர்கள் :

பங்குத்தந்தை  Dr.M.C. ராஜன்
பங்குப்பேரவை நிர்வாகிகள் மற்றும்
திரு. G. சாம்ஜி ஜெபர்சன் (பங்குப்பேரவை தொடர்பாளர்)
திரு.  ஸ்டாலின்
திரு. எப்ரேம் ஹென்றி
திரு.  அலெக்ஸாண்டர்
திரு. A. சுந்தர்சிங்
திரு. S. மிக்கேல்

செயல்பாடுகள் :

1. பங்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த சொத்துக்கள் வாங்கப்பட்டது. (60 சென்ட் நிலம்)
2. ஏற்கெனவே இருந்த நிலத்தில் நீர் வளத்தை மேம்படுத்த ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்டது.
3. மின் இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
4. ஆலய வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இடையூராக இருக்கும் மின்கம்பிகளை ஆலய வளாகத்திலிருந்து மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
5. பொன்விழா நுழைவு வாயில் திட்டமிடப்பட்டு கட்டிடக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
6. ஆலய வளாகத்தில் வங்கி ஒன்று ஆரம்பிக்கும் விதமாக திட்டமிட்டு கட்டிடப் பணிகள் சிறப்புடன் நடத்தி முடிக்கப்பட்டது.
7. வங்கிக்கான நிதிகளை திரட்டும் விதமாக திருமண மண்டப உறுதி பத்திர திட்டம் உருவாக்கப்பட்டது.
8. உறுதி பத்திரத்திற்கான தொகையை வசூலிக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து வாரந்தோறும் பங்கிலுள்ள இல்லங்களுக்கு சென்று அதற்கான தொகையை வசூலித்து வந்தனர். பின்பு அந்தந்த நபர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.