Jubilee Souvenir Team

பொன்விழா மலர்குழு

எமது தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்குச் சமூகம் தனிப்பங்காக செயல்பட ஆரம்பித்து அரை நூற்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தூய பனிமய அன்னை ஆலய பங்கு குடும்பம் தனது பொன்விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் முத்தாய்ப்பாக பொன்விழா மலர் ஒன்று வெளியிட வேண்டும் என்ற ஆவலோடு உருவாக்கப்பட்டது தான் பொன்விழா மலர்க்குழு. ஜபிலி ஆண்டில் ஏற்ப்படுத்தப்பட்ட 10 துணைக்குழுக்களுள் இதுவும் ஒன்று.

உறுப்பினர்கள்

அருட்பணி.Dr.M.C ராஜன்
திரு.Y.M. ஆன்றனி
திரு. A. ராஜரெத்தினம்
திரு. S. ஞானபிரகாசம்
திரு.M. சேவியர்
திரு. J. மைக்கேல் ராஜ்
திரு.G. சாம்ஜி ஜெபர்சன்
திரு.M.L. ஜாண்சன்
அருட்சகோதரி. ஜோஸ்பின் போனிப்பாஸ்
திருமதி.P. லெல்லிஸ்
திருமதி. ரோச் சிந்திகா
செல்வி. M. ஹென்ஸி

செயல்பாடுகள் :

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலயம் கடந்து வந்த பாதைக்கு வரலாற்று பின்னணியை அலசி ஆராய்ந்து எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பங்கில் செயல்படுகின்ற குழுக்கள், இயக்கங்கள், பக்தசபைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக பொன்விழா மலரில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பங்கில் பொன்விழா ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பங்கில் பணிசெய்த மற்றும் பங்கைச் சார்ந்த அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகளின் வாழ்த்துக்களோடு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்களின் ஆசியுரையோடு பங்கின் பொன்விழா மலர் பதிப்பிக்கப்பட்டுள்ளது.