Justice

நீதிக்குழு

"நீதியும் நோ்மையும் பிறரன்பு சேவையும் இம்மண்ணில் நிலைக்க"
பொன்விழா ஆண்டினை பயனுள்ள , பலன் தரும் ஆண்டாக மாற்றிட உருவாக்கப்பட்ட 10 துணைக்குழுக்களில் ஒன்று நீதிக்குழு.

நோக்கம் :

எமது தென்தாமரைகுளம் பங்குச் சமூகத்தில் நீதியை நிலைநாட்ட, பிரச்சனைகளுக்கு தீர்வு காண, முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வரே எமது நீதிக்குழுவின் நோக்கம்.

உறுப்பினர்கள் :

அருட்பணி. Dr.M.C. ராஜன் (பங்குத்தந்தை)
திரு. ரெத்தினராஜ் (பங்குப்பேரவை தொடர்பாளர்)
திரு. விண்ணரசன்
திரு. கான்ஸ்டன்
திரு. தைநேசி முத்து
திருமதி. செல்வராணி
திரு. ஜீவா
திரு.அலெக்ஸ் நவமணி

செயல்பாடுகள் :

வீடு கட்டுமான பணிக்காக வங்கியில் கடன் வாங்கி கடன் தொகையை கட்டமுடியாத நிலையில் எம்மை அணுகிய ஒரு குடும்பத்தின் கடன் தொகையை வங்கியில் பேசி குறைத்ததோடு பங்குமக்களின் உதவியோடு வீ்ட்டை மீட்டு கொடுத்துள்ளோம்.
30-10-2016 அன்று சாலை வழியாக ஜெபமாலை பவனி நடத்த காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
எமது ஊருக்கு வந்து செல்லக்கூடிய அரசு பேருந்துகள் (1H, 2E. 2L) சரியான நேரத்தில், குறித்த வழிதடத்தில் இயங்குவதற்காகவும், சரியாக இயக்கப்படாமல் உள்ள அரசு பேருந்துகளை (2A, 2D, 2G) சரிசெய்து இயங்கச் செய்யவும் அனைவரும் இணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பங்கில் நடைபெறும் முக்கிய செயல்பாடுகளில் குறிப்பாக திருவிழா, திருப்பலி, குருத்தோலை பவனி, அசன விருந்தில் ஈடுபட்டு அவை நோ்த்தியாக, அமைதியான முறையில் நடக்க உதவி செய்கிறோம்.