சமூக தகவல் தொடர்புக் குழு
நமது பங்கிலிருந்து வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் வேலை செய்து வாழும் நமது சொந்தங்களின் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று “நமது ஆலய திருவிழா நிகழ்வுகள், கிறிஸ்மஸ் மற்றும் உயிர்ப்பு நிகழ்வுகளை வெளியூரிலிருந்தே பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்பது. எனவே புதுமுயற்சியாக திருவிழா நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்யலாம் என பங்குப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி எமது சமூக தகவல் தொடர்புக் குழுவானது 25-7-2016 அன்று நமது பங்குத் தந்தை Dr.Fr. M.C.ராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
நோக்கம்
- பங்கு இணையதளத்தை புதுப்பித்தல் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வது.
- திருவிழா நிகழ்வுகளை இணையதள தொலைக்காட்சி மூலம் நெரடி ஒளிபரப்பு செய்வது. (Web TV)
- விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்கள் மற்றும் திரைக் காவியங்களை திரையிடுவது.
- சிறப்பு வழிபாடு மற்றும் புனிதர்கள் திருவிழாக்களை எடுத்துரைப்பதற்கு “Flex” பேனர்கள் வைப்பது.
- பொன்விழா ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பொன்விழா (Logo) மற்றும் Flex அமைப்பது.
கூடும் இடம் - அன்னை அறிவாலயம்
கூடும் நேரம் - இரவு 8.00 மணி
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணிக்கு கூடி பங்குத் தந்தையின் வழிகாட்டுதலின்பேரில் திட்டங்களை தீட்டி திறம்பட செயல்படுகின்றோம்.
இயக்குநர்
பங்குத் தந்தை அருட்பணி ஜெரி வின்சென்ட்
பங்குப் பேரவை தொடர்பாளர்கள்
திரு. மிக்கேல் அர்க்காஞ்சல்
திரு. ஜேசு ரெத்தினம்
உறுப்பினர்கள்
திரு. மரிய தாமஸ் சேவியர்
திரு. C.S. ரெஜிஸ்
திரு. அருள் ராஜ்
திரு. ஆன்டன் சேவியோ லிவைஸ்
செல்வன். மஸ்கிரீன் மாஸ்க்
குழுவின் செயல்பாடுகள்
- மிக குறைந்த செலவில் திருவிழா நிகழ்வுகளை (Web TV முறையில்) ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- பொன்விழா லோகோ நமது பங்கு மக்களின் உதவியோடு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.
- நமது ஆலய வரலாற்றினை எடுத்துரைக்க வரலாற்று குறிப்புகள் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய “Flex” பேனர் வைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 15-ம் தேதி மாதாவின் விண்ண்ணேற்ப்பு பெருவிழா மற்றும் நமது பாரத நாட்டின் சுதந்திரதின விழாவை முன்னிட்டு அன்று மாலை புனித அந்தோணியார் திரைப்படம் திரையிடப்பட்டது.
- நமது பங்கில் செயல்பட்டுவரும் AA புதிய விடியல் என்ற போதை நோய் எதிர்ப்பு இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் போதை, புகை மற்றும் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீயவிளைவுகளை விவரிக்கும் விதமாக குறும்படம் திரையிடப்பட்டது.
- அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக செப்டம்பர் 11ம் தெதி அன்னைத் தெரசாவின் Flex,பேனர், புனித தெரசாவை பற்றிய குறும்படம் மற்றும் "அன்னை வேளாங்கண்ணி" திரைப்படமும் திரையிடப்பட்டது.
- செப்டம்பர் 25 – ம் தேதி விவிலிய ஞாயிறு கொண்டாடப்பட்ட போது விவிலிய ஞாயிறுக்கான Flex – வைக்கப்பட்டது.