விவிலியப்பணிக்குழு
நோக்கம்
“ஆளுக்கொரு விவிலியம் நாளுக்கொரு இறைவார்த்தை” என்பதை நம் பங்கில் எடுத்துச் சென்று இறைவார்த்தையின் அடிச்சுவடுகளை தியானிக்க செய்வது. பங்கில் உள்ள எல்லா குடும்பங்களிலும் விவிலியம் உள்ளதா, என்பதை அன்பியங்கள் வாயிலாக ஆராய்ந்து அனைத்து குடும்பங்களிலும் நாளொன்றுக்கு ஒரு இறைவார்த்தையாவது வாசித்து வாழ்வாக்கச் செய்வதே இதன் நோக்கம்."
தோற்றம்
விவிலியப் பணிக்குழுவானது நமது பங்கில் உள்ள 12 அன்பியங்களிலிருந்து ஒரு நபர் வீதம் 12 நபர்களுடன்31-08- 2016 அன்று நம் பங்கு தந்தை M.C. ராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
நிர்வாகிகள்
பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின் படி
தலைவராக - திருமதி. ஜெயமேரி
துணைத்தலைவர் - திருமதி. சோனி
செயலராக - திருமதி. ஜோஸ்பின் சுனிதா
துணைச்செயலர் - திருமதி. சகயா ராஜேஸ்வரி
பொருளர் - திருமதி. மல்லிகா

செயல்பாடுகள்
இக்குழுவின் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாலை திருப்பலிக்குப்பின் நடைபெறுகிறது. மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமை கன்னியாகுமரியில் நடைபெறும் பயிற்சியிலும் மேலும் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற பயிற்சியிலும் எம் நிர்வாகிகள் கலந்து சிறப்புறசெயல்பட்டு வருகின்றனர்.