கத்தோலிக்க சேவா சங்கம்
கிறிஸ்து அரசர் வாழ்க ! அவரது அரசு வருக!
தொகுதி தொடங்கப்பட்ட நாள் - 26-10-2012மண்டலம்- கன்னியாகுமரி
தொகுதியின் பெயர்- தென் தாமரைகுளம்
கூட்டம் நடைபெறும் நாள் - வியாழன்
நேரம் - 2.00 மணி
நோக்கம்
“அனைத்தையும் கிறிஸ்துவில் புதுப்பித்தல், நற்செய்தியை அறிவித்து மக்களை புனிதப்படுத்துதல், பரிசுத்த ஆவியின் கனிகளையும், அருங்கொடைகளையும் பெற்று அடிப்படை கிறிஸ்தவர்களாக வாழ்தல் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.
எம் பங்கில் சங்கம்
எமது பங்கில் கத்தோலிக்க சேவா சங்க இயக்கமானது 26-10-2012 வெள்ளிக்கிழமை எம் பங்கு தந்தை Dr. V. ஹிலேரியஸ் தலைமையில், மண்டல தலைவர் திரு. S.A.D. தாஸ் அவர்கள் முன்னிலையில் 15 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 18 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
அப்போது நிர்வாகிகளாக
தலைவர் - அனுஷியாசெயலர் - மெர்லின் ஜோஸ்
பொருளர் - அன்னமேரி ஜாண்சிலி
ஆகியோா் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தை வழிநடத்தினார்கள். மேலும் மூன்று ஆண்டுகளுக்குஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும். இதில் இந்த ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

நிர்வாகிகள் :
தலைவர் - திருமதி. லெயோனிஸ் புனிதாதுணைத்தலைவர் - திருமதி. ஞான சௌந்தரி
செயலர் - திருமதி. செலின் ஆன்றனி கெமல்டா
துணைச்செயலர் - திருமதி. சகாய ரெஜி
பொருளர் - திருமதி. சகாய லில்லி
சிறப்பு உறுப்பினர் - திருமதி. மெர்லின் ஜோஸ்
பங்கு பேரவை உறுப்பினர் - திருமதி. சகாய லில்லி
ஆகியோர் பங்கு தந்தையின் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தை வழிநடத்தி வருகிறார்கள். மேலும் மண்டல செயலராக திருமதி. லெயொனிஸ் புனிதா அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்
இதன் சிறப்பு செயல்பாடுகளாக :
நோயாளி சந்தித்தல் :-
- கேன்சர் நோயாளியான திரு. சந்தனம் அவர்களை 20-11-2013 அன்று 8 உறுப்பினர்கள் சென்று சந்தித்து அவர்களுக்காக ஜெபம் செய்தோம்.
- படுக்கை நோயாளியான திரு. பிரான்சிஸ் அவர்களை 06-06-2013 அன்று 7 உறுப்பினர்கள் சென்று சந்தித்து அவர்களுக்காக ஜெபம் செய்தோம்.
- சுகர் புண் நோயாளியான திரு. மரிய ஜார்ஜ் அவர்களை 28-08-2014 அன்று 10 உறுப்பினர்கள் சென்று சந்தித்து பேசி உறவாடி அவர்களுக்காக ஜெபமும் செய்தோம்.
- படுக்கை நோயாளியான திருமதி . சந்தனம் அவர்களை 19-06-2015 அன்று முதல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 6,7 உறுப்பினர்கள் சென்று அவர்களை குளிக்க வைத்து சுத்தமும் செய்து அவர்களுக்கு தேவையான உதவி செய்து வந்தோம்.
ஏழைகளுக்கு உதவி
ஆண்டு தோறும் உயர்கல்வி படிப்பிற்காக பங்கில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மண்டலத்தோடு இணைந்து ரூ.1000/- வீதம் வழங்கி வருகிறோம்.
இதில் பயன் பெற்றவர்கள் :
- 2014 –ம் ஆண்டு திருமதி. மேரி கார்மல் அவர்கள் மகள் ஜிஜிலி சப்னா .
- 2015-ம் ஆண்டு திருமதி. மகிழா அவர்கள் மகள் சுபிதா
- 2016-ம் ஆண்டிற்கான உதவிதொகையை திருமதி ஸ்டெல்லா அவர்களின் மகள் பிரதிக்ஷாவுக்குகொடுக்க முடிவு செய்துள்ளோம்.
- மேலும் திருமதி. பெல்சி பாய் அவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளோம்.
சிறப்பு சேவை
- பல் சமய உறவு வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு 15-04-2014 அன்று 10 உறுப்பினர்கள் CSI சபையை சேர்ந்த கேன்சர் நோயாளியான திரு. ஆசிர்வாதம் அவர்களின் இல்லத்திற்கு சென்றுஅவர்களிடம் பேசி உறவாடி அவர்களின் மருத்துவ செலவுக்காக ரூ.1000/- கொடுத்தோம்.
- இரண்டு ஆண்டுகளாக திருப்பலிக்கு வராமல் இருந்த குடும்பத்தை ஆறு மாதமாக சென்று சந்தித்து திருப்பலிக்கு கலந்து கொள்ள வைத்தோம். மெலும்,
- சுரேஷ் என்ற இளைஞனையும் திருப்பலிக்கு வர வைத்தோம்.
திருவழிபாட்டில் பங்கேற்பு
எங்களுக்கு திருப்பலி சிறப்பிப்பதற்காக தரப்படும் நாள்களை எமது உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சிறப்பிப்பதோடு, ஞாயிறு திருப்பலி வழிபாட்டிலும் காணிக்கை பவனியில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து வருகிறோம்.
தளப்பணி
மாதம் தோறும் ஒவ்வொரு தொகுதியிலும் தளப்பணி நடைபெறும் இதில் 10,12,14 உறுப்பினர்கள் கலந்து கொண்டு அந்த தொகுதியில் உள்ள குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான ஜெப உதவிகளை செய்து வருகிறோம். இதை போன்று 20-05-2014 ஞாயிறு அன்று எங்கள் பங்கிலும் தளப்பணி நடைபெற்றது. இதில் சுமார் 40 குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான ஜெப உதவிகளை செய்தோம்.
மேலும் கிறிஸ்து அரசர் பெருவிழாவை ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் அன்பிய மக்களோடு இணைந்து சிறப்பித்து வருகிறோம். திருப்பலிக்கு முன் கிறிஸ்து அரசர் கொடி பங்குதந்தையால் ஏற்றப்பட்டு வார்த்தைப்பாடுகளை புதுப்பிப்போம். திருப்பலி முடிந்ததும் இனிப்புகள் வழங்கி வருகிறோம்.
மேலும் ஆண்டுதோறும் தவக்காலத்தில் மண்டலத்தில் வைத்து தவக்கால தியானம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் 10,13 உறுப்பினர்கள் கலந்து கொள்வோம்.
எதிர்கால திட்டம்
- எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 10 குடும்பங்களையாவது குடும்ப ஜெபமாலை செய்ய தூண்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
- முதியோர் ஊனமுற்ற விடுதிக்கு சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும்.
- குடிநோயால் பாதித்த ஞாயிறு திருப்பலிக்கு வராத ஒரு சில இளைஞர்களை சந்தித்து பேசி திருப்பலியில் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்துள்ளோம்.