Childern

பாலர் சபை

பிரிவு : I

நோக்கம்

சிறுவர் பருவத்திலேயே நல்ல மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள், படிப்பில் ஆர்வம் திறமைகளை கண்டறிதல் போன்றவற்றில் வளர செய்து கடவுள் பக்தியிலும் பெற்றோர் வழிகாட்டுதலிலும் நடக்கவைத்தல்.

வழிகாட்டிகள் :

பாலர் சபை - திருமதி.M . கலா ராணி, செல்வி. M. சகாய நிஷா

உறுப்பினர்களின் எண்ணிக்கை - 20

கூட்டம் நடைபெறும் இடம்,நேரம்

கூடும் நாள் - ஞாயிறு

நேரம் - பகல் 2.00 மணி

இடம் - தூய பனிமய அன்னை ஆலயம்

கூட்டம் நடைபெறும் முறை :

ஜெபத்துடன் ஆரம்பமாகி, சிறுவர்களுக்கான நீதிக் கதைகள், படத்துடன் கூடிய விவிலிய கதைகள், சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களை ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் மூலம் மகிழ்வித்தல் மற்றும் சிறிது நேரம் விளையாட்டு.

திட்டங்கள் :

  • இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ வழிகாட்டுவது
  • சமுதாய விழிப்பபுணர்வை ஏற்படுத்துவது.
  • நீதி கதைகள் மூலம் பாலர்களுக்கு நல்வழி காட்டுதல்

செயல்பாடுகள் :

  • சிறுவர்களை உற்சாக படுத்தும் விதமாக கதைகள், விடுகதைகள் கூறப்படுகின்றன.
  • பாலர்களுக்கு Action Songs மற்றும் சிறு சிறு விளையாட்டுகள், குட்டிக் கதைகள் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவது.
  • பாலர்சபை தினத்தை கொண்டாடுகிறோம்.
  • எம் சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை நம் பங்கு இதழாகிய பனித்தூறலிலும் வெளியிடுகின்றோம்.
 

பாலர் சபை

பிரிவு : II

வகுப்பு :

1 மற்றும் 2

நோக்கம் :

ஒவ்வொரு குழந்தையும் ஆண்டவரின் தூதுவர்களாகவும், இந்த உலகத்திற்கு நற்செய்தி அறிவிப்பாளர்களாகவும், சமுதாயத்திற்க ஏற்ற நல்ல குழந்தைகளாகவும் வளர வழி செய்தல்.

தோற்றம் :

29/08/2016 அன்று நம் பாலர்சபை புதுப்பிக்கப்பட்டு நம் பங்குத்தந்தை M.C.ராஜன் அவர்கள் தலைமையில் திருமதி. ஜாண்சிலி, திருமதி. ஜோஸ்பின் சுனிதா அவர்கள் வழிகாட்டுதலில் 27 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
கூடும் நாள், நேரம் : ஞாயிறு மதியம் 2.00 முதல் 3.00
கூடும் இடம் : ஆலய வளாகம்

நிகழ்வுகள் :

இறைவணக்கப்பாடலுடன் ஆரம்பமாகி இறைவார்த்தைகள் வாசிக்கப்படுகிறது. கதைகள், விடுகதைகள் உறுப்பினர்களால் சொல்லப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைகளுடன் உரையாடி அவர்களது மனநிலையை அறிந்து கொள்கிறோம். மேலும் குழந்தைகளின் பிறந்த நாள்களை தொிந்து வாழ்த்துச் சொல்கிறோம். இதன் மூலம் குழந்தைகள் உற்சாகம் அடைகின்றனர். இறுதியாக குழந்தைகளுடன் வழிகாட்டிகளும் இணைந்து விளையாடி மகிழ்கின்றோம். இவ்வாறு எம் பாலர்சபை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பாலர் சபை

பிரிவு : III

வகுப்பு :

3 மற்றும் 4
கூடும் நாள் : ஞாயிறு
கூடும் நேரம் : 2.00 முதல் 3.00 மணி

தோற்றம் :

1996-ம் ஆண்டு செல்லையன் அவர்கள் தலைமையில் எம் பாலர்சபை இயக்கமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறுவர் சிறுமிகளை ஒன்றாக இணைத்து வைத்து கூட்டம் நடைபெறும். பின்னர் கூட்டம் சிறிது தொய்ந்து காணப்பட்ட நிலையில் நமது முன்னாள் பங்குத்தந்தை ஹிலாரியுஸ் அவர்கள் புதுப்பித்தார்கள். தற்போது நமது பங்குத்தந்தை ராஜன் அவர்கள் பாலர்சபையை மூன்று குழுவாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு வழிகாட்டிகள் வீதம் தோ்ந்தெடுத்து புதுப்பொலிவுடன் செயல்படுத்தி வருகிறோம்.

நோக்கம் :

சிறுவர்களிடம் நல்ல மதிப்பீடு, ஒழுக்க நெறி, கீழ்படிதல், ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுதல், விட்டுக்கொடுத்தல், பெற்றோர்-குழந்தை உறவை ஆழப்படுத்த இடைவெளியை குறைத்து அன்புடன், புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை இதயத்தில் பதிப்பதே..

வழிகாட்டி :

திருமதி. சாந்தி

குழந்தைகள் :

1. அபினேஷ்கரன்
2. ஆன்றனி ரிஜோ
3. ஆன்றனி ரினோ
4. ஆஸ்டன்
5. ஆட்வின் பபின்
6. கிளாட்வின்
7. ஜெப்ரின்
8. ஜொ்சன்
9. ஜொின் டோனி
10. லிஜோ சேகன்
11. ரிஜோன்
12. சகாய ஆன்றனி
13. வினு
14. அஜிஷானி
15. அல்பினா
16. அக்சயா
17. கரோலின் செல்ஷியா
18. கேத்ரின்
19. லுவேனா
20. ஸ்னோலின் செல்ஷியா
21. சகாய பிரியா

கூட்டம் நடைபெறும் முறை :

ஆலயத்தினுள் வைத்து துவக்கப்பாடல் பாடி, விவிலியம் வாசித்து, சிறு ஜெபத்துடன் ஆரம்பமாகும். பின்னர் அருட்சகோதார்.ஜாண் பிரிட்டோ அவர்கள் குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லி கொடுத்து உற்சாகப்படுத்துவார்கள். பின்னர் அனைவரும் வகுப்பிற்கு சென்று வருகைபதிவு எடுக்கப்படும். பின்பு அவர்களை குழுக்களாக பிரித்து ஓவியம் வரைய செய்தல். நீதிகதைகள், பைபிள் கதைகள், விடுகதைள் என குழந்தைகளை சுறு சுறுப்புடன் இருக்க வைப்பதுடன் , இறுதியில் இனிப்புகள் வழங்கி மகிழ்விக்கிறோம்.

திட்டங்கள் :

1. இயேசுவின் மதிப்பீடுகளின் வாழ வழிகாட்டுவது.
2 சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
3. ஒவ்வொருவரின் திறமைகளை வெளிகொணர்வது.
4. நீதி கதைகள் மூலம் நல்வழி காட்டுவது.