Christian Workers

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

எம் பங்கில் இயக்கம்

2004-ம் ஆண்டு எம் பங்குப்பணியாளராக பணியாற்றிய அருட்பணி. மைக்கெல் ஏஞ்சல் அவர்களால் பிப்ரவரி22-ம் தியதி “தூய பனிமயமாதா நற்பணிமன்றம்” என 20 உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இன்று எம் பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் “கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமாகும்”

எம் இயக்கத்தின் நோக்கம்

எம் இயக்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களே.  தொழிலாளர் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை மறைமாவட்ட இயக்கத்துடன் இணைந்து தீர்ப்பதும், அரசு வழங்கும் உதவித்தொகைகளை தகுதியுள்ள அனைவரும் பெற உதவி செய்வதும், எம்மை சுற்றி வாழும் ஏழைகள், விதவைகள், அனாதைகள், நோயாளிகள், மற்றும் தேவையில் வாழுவோருக்கு எம்மாலான உதவிகளை செய்வதுமே எமது இயக்கத்தின் நோக்கமாகும்.

நிர்வாகம்

மாதத்தின் 2 மற்றும் 4-ம் ஞாயிறு காலை 10 மணிக்கு ஆலய வளாகத்தில் எமது இயக்க கூட்டமானது நடைபெறுகின்றது.  மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 41.

இயக்குநராக அருட்பணி - Dr.M.C. ராஜன் (மறைமாவட்ட இயக்க சட்ட ஆலோசகர்)

தலைவர்- திரு D. தைனேசி முத்து
துணை தலைவர் - திரு.M. பொனிப்பாஸ்
செயலர்- திரு.G. சாம்ஜி ஜெபர்சன் (மறைமாவட்ட இயக்கசெயலர்)
பொருளர்- திரு.R. எப்ரேம் ஹென்றி
பங்குப்பேரவை  உறுப்பினர்- திரு.A. மைக்கேல் அர்க்காஞ்சல்

நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பொறுப்பில் நீடிப்பர். சுழற்ச்சி முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இயக்கத்தின் செயல்பாடுகள்

  • மறைமாவட்ட இயக்கத்துடன் இணைந்து செயல்படுகின்றோம்.
  • பயிற்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்கின்றோம்.
  • எம் பங்குத்தந்தையுடன் இணைந்து ஆலோசித்து தேவையில் உள்ளோருக்கு உதவிகள்செய்கின்றோம்.
  • ஆதரவற்ற ஏழைகளுக்கு மாதம் ரூ.300/- உதவிதொகை வழங்குகின்றோம்.
  • 2 ஏழைகளுக்கு சுமார் 600 சதுர அடியில் கான்கிரீட் வீடு இலவசமாக செய்து கொடுத்துள்ளோம்.
  • மருத்துவ உதவித் தொகையாக இதுவரை ரூ.2,87,500/- வழங்கியுள்ளோம்.
  • ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகையாக ரூ.1,01,000/- வழங்கியுள்ளோம்.
  • ஏழைகள் வீடு பராமரிப்பிற்கு ரூ.77,500/- வழங்கியுள்ளோம்.
  • அங்கன் வாடி குழந்தைகளுக்கு 25 இருக்கைகள், சமையல் பாத்திரங்கள் தரை விரிப்புகள், பாய்ஆகியவை வழங்கினோம்.
  • மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் நல சங்கங்களுக்கு ஆண்டு தோறும் நிதி உதவி செய்துவருகின்றோம்.
  • 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் தாங்கள்பயிலும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு  தங்கப்பதக்கமும் வழங்கி ஊக்கப்படுத்துகின்றோம்.
  • கலை மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த விழாக்கள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகின்றோம்.
  • உறுப்பினர்களுக்கு Insurence திட்டமும், மருத்துவ உதவித்தொகைகளும் வழங்கி வருகின்றோம்.
  • பங்கின் வளர்ச்சியிலும் எம் இயக்கம் தனது பங்கேற்பை முழுமையாக வழங்கி வருகின்றது. விழாக்கள் மற்றும் பங்கு நிகழ்ச்சிகளில் முழுமையாக ஈடுபடுகின்றோம்.
  • நமது பங்கு மட்டுமல்ல பங்கை சுற்றி வாழும் ஏழைகள் தேவையில் வாடுவோருக்கு உதவிகள் செய்து இறையருளை நிறைவாக பெற்ற வருகின்றோம்.