மரியாயின் சேனை
சேனையின் நோக்கம் :
"ஜெபமும் சேவையும்" சேனையின் முக்கிய நோக்கமாகும்.தோற்றம்
1966-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எமது மரியாயின் சேனையானது இடையிலே சிறிது தொய்வடைந்திருந்தாலும், மீண்டும் புதுப்பொலிவு பெற்று தற்போது 22 உறுப்பினர்களுடன் சிறப்புறசெயல்பட்டு வருகின்றது.
நிர்வாகிகள்
தலைவர் : திருமதி K. மேரி சொர்ணபாய் துணைத்தலைவர் : திருமதி P. மோி மகிழா செயலர் : திருமதி. D. மரிய ஜேசு தங்கம் பொருளர் :திருமதி. T. பிளாரன்ஸ் மோி
சேனையாளர்கள் செய்த சேவைகள் :
- வீட்டில் உள்ள நோயாளிகளையும், முதியவர்களையும், இன, மொழி வேறுபாடின்றி எல்லோரையும் சந்தித்து, ஜெபித்து ஆறுதல் கூறி வருகிறோம்.
- போதைத்தரும் பொருட்களை பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறவர்களை சந்தித்து ஜெபித்து அறிவுரையும் கூறுகிறோம்.
- இறந்தவர் இல்லம் சென்று இறந்தவர்களுக்காக ஜெபித்து திருப்பலியிலும் கலந்து கொள்கிறோம்.
- மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறுகிறோம்.
- பிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து, ஜெபித்து அறிவுரைக் கூறி சமாதானப்படுத்துகிறோம்.
- சவுல், புனிதபவுலாக மாறியதுபோல் உலகில் உள்ள எல்லா பாவிகளும் மனம் திரும்பவும் ஜெபிக்கிறோம்.
- ஆத்துமாக்கள் மாதம் (நவம்பர்) சேனையில் இருந்து இறந்துபோனவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கிறோம்.
- ஆலயத்தில் தினமும் மதியம் பொதுக்கருத்துக்காகவும், தவக்காலத்தில் வியாழன் 1 மணிநேரம் ஆராதனையும் செய்கிறோம்.
- கிறிஸ்தவ, பிற மத சகோதரர்களுக்கும் மருத்துவ உதவியும் செய்கிறோம்.
- கிறிஸ்தவ கடைகளில் வேறு படங்கள் போடக்கூடாது என கூறியுள்ளோம்.
- கிறிஸ்தவ பிற மத சகோதரர்களுக்கும் புனிதர்கள் விவிலியம் பற்றிய கருத்துக்களை கூறி ஜெபங்கள் உள்ள படங்கள் புதுமை எண்ணெய்கள் கொடுத்து ஜெபிக்க கூறியுள்ளோம்.
- இளைஞர்கள் பொது சேவை செய்ய கூறியுள்ளோம்.
- ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆதரவு இல்லாதவர்களுக்கு கூட சென்று உதவியுள்ளோம்.
- குளத்தில் குளிக்க சென்ற போது நீச்சல் தொியாத இரு குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம்.
- அக்டோபர் மாதம் 153 மணி ஜெபமாலை, அர்ப்பண ஜெபமும் செய்கின்றோம்.
- படிக்கின்ற பிள்ளைகளினால் பிரச்சனையாக இருந்த குடும்பத்தை சந்தித்து அறிவுரைக் கூறியுள்ளோம்.
- 17விபுதி புதன் (சாம்பல் திருவிழா) ஆலயத்திற்கு வர இயலாமல் இருந்த 3 கிறிஸ்தவ நோயாளிகளுக்கு சாம்பல் கொடுத்து உதவியுள்ளோம்.
- விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதை விட துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது என சபை உரையாடல் (7 – 2) நூலில் கூறப்பட்டுள்ளது போல நாங்கள் இறந்தவர் வீட்டிற்குச் சென்று இறந்தவருக்காக ஜெபித்து கல்லறை வரை சென்று வருகின்றோம்.
- வீட்டிலுள்ள நோயாளிகளையும், முதியவர்களையும் ஜாதி மத பேதமின்றி அனைவரையும்சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறி வருகிறோம்.
- போதைக்கு அடிமையானவர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைக்கூறி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஜெபிக்கிறோம். அவர்களையும் ஜெபிக்க ஊக்குவிக்கிறோம்
- மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபித்து உதவியும்செய்து வருகிறோம்.
- கோவிலுக்கு 7 வருடம் வராத ஒரு சகோதரியையும், 3 வருடம் வராத ஒரு சகோதரியையும் திருப்பலிக்கு வரச்செய்து பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ள செய்தோம்.
- இறை இரக்கத்தின் ஆண்டை முன்னிட்டு குடும்பங்களுக்கு சென்று இரக்கத்தின் ஜெபமாலைஜெபிக்கிறோம். அவர்களையும் ஜெபிக்க வைக்கிறோம்.
- ஜாதி மத பேதமின்றி பிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து அறிவுரையும் ஆறுதலும்கூறி சமாதானம் செய்து வருகிறோம்.
- பாவிகள் மனந்திரும்ப தினமும் ஜெபமாலை ஜெபித்து ஒப்புக் கொடுக்கிறோம்.
- கவனிக்க ஆள் இல்லாமல் தனிமையில் தவிக்கும் படுக்கை நோயாளியை சந்தித்து அவர்களைகுளிப்பாட்டி, உணவூட்டி, உதவி செய்து கவனித்து வருகிறோம்.
- ஏழைகளுக்கு, உதவித் தேவைப்படுவோருக்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ உதவி செய்கிறோம். மற்றும் சிலருக்கு அரிசி, தேங்காய், பணம் கொடுத்து உதவிவருகிறோம்.
- சேனையிலிருந்து இறந்து போனவர்களுக்கு திருப்பலி ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறோம்.
- முதியோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம் சென்று அவர்களை பார்த்து பேசி உதவிசெய்கின்றோம்.