சிறுவழி இயக்கம் பெண்கள்
நோக்கம்
நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை உணர்ந்து, இந்த உலகத்திற்கு நலமான சமூகத்தை உருவாக்கவும், இறை அன்பு மற்றும் நற்செய்தியை பரப்புவதற்கும் குழந்தைகளுடைய தேவைகளை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களாகவும் குழந்தைகனள உருவாக்குவதே.
தோற்றம் :
Fr. P.K. செல்லையன் அவர்கள் தலைமையில் உருவானதே எம் சிறுவழி இயக்கம். 29-08-2016 அன்று தற்போதைய பங்குத்தந்தை Dr.M.C. ராஜமணி அவர்கள் தலைமையில் திருமதி. N. ஜோஸ்பின் மொிஸ்டல், திருமதி.R. மீரா அவர்களின் வழிகாட்டுதலில்
நிர்வாகிகள் :
வழிகாட்டிகள் : திருமதி. ஆனி மீரா,
திருமதி. ஜோஸ்பின் மெரிஸ்டல்
தலைவர் : மெர்ஸி துணைத்தலைவர் : லிடியா செயலர் : ஸ்னோலின் செல்சியா துணைச்செயலர் : ஜில்னி பொருளர் : பெரோனாஸ்வினி மொத்த உறுப்பினர்கள் : 16நடைபெறும் நேரம் :
ஞாயிறு மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
நடைபெறும் இடம் :
ஆலய வளாகம்

நிகழ்வுகள் :
இறைவணக்கப்பாடலுடன் ஆரம்பமாகி இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. கதைகள், கவிதைகள், உறுப்பினர்களால் சொல்லப்பட்டு பொது அறிவு வளர்க்கப்பட்டு வருகிறது. புனிதர்களின் வரலாறுகள் கதை வழியில் வழிகாட்டிகளால் கூறப்பட்டு வருகிறது.
இறுதியில் விளையாட்டுக்கள் விளையாடி உறுப்பினர்கள் உற்சாகம் அடைகின்றனர். இவ்விதம் எமது சிறுவழி இயக்கம் சிறப்பாக நடைபெறுகிறது.
செயல்பாடுகள் :
- பங்கு அளவிலும் வட்டார அளவிலும் நடைபெற்ற உளவியல் மற்றும் ஆன்மீக பயிற்சிகளில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டோம்.
- ஓணப் பண்டிகையை முன்னிட்டு இளம் கிறிஸ்தவ மாணவ, மாணவியர் இணைந்து நடத்திய கோலப் போட்டியில் கலந்து கொண்டு 2-ம் பரிசு பெற்றுள்ளோம்.
- பனித்தூறல் பங்கு இதழ் நடத்திய வினாடிவினா போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு பெற்றுள்ளோம்.
- 12/2/2018 பாலர் சபை தினத்தை முன்னிட்டு பாலர் சபையுடன் இணைந்து சிறப்புடன் திருப்பலி நிறைவேறவும், அன்று காலை 10.000 மணி முதல் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து மகிழ்ந்தோம். மாலை 7.00 மணிக்கு எங்களது கலை நிகழ்ச்சிகளை வழங்கி பங்கு மக்களை மகிழ்வித்தோம்
- இயற்கை வளங்களை பாதுகாப்பது, ஒதுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனை கொள்வது குழந்தைகளுக்கு எதிரான அநீத செயல்களுக்கு குரல் கொடுப்பது.
- நம்மையும் நம் சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைத்திருப்பது.