Liturgy

திருவழிபாட்டுக் குழு

நிர்வாகிகள்

இயக்குநர் - பங்குத் தந்தை
தலைவர் - திருமதி. மேரி சொர்ணபாய்
துணை தலைவர் - J. மரிய ஜாண்சி
செயலர் - M. ஜேம்ஸ்
துணைச் செயலர் - A. அப்சரா ஸ்னோலி
பொருளர் - Y.M. ஆன்றனி
உறுப்பினர்கள் எண்ணிக்கை - 27

நோக்கம்

வழிபாடுகளில் இறைமக்களை வெறும் பார்வையாளர்களாக அல்லாமல் பங்கேற்பாளா்களாக மாற்றுவதும், அர்த்தமுள்ள முறையில் வழிபாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துவதும்.

துவங்கப்பட்ட காலம்

1983-ம் ஆண்டு Fr.வல்தாரிஸ் அவர்களால் வழிபாட்டுக்குழு துவங்கப்பட்டது. பின்னர் Fr.அமிர்தராஜ் அவர்களால் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக இன்று வரை செயல்பட்டு வருகிறது.  Fr.செல்லையன் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த போது பீடச்சிறுவர், பாடகர்குழு, வழிபாட்டுக்குழு இணைந்து வாரம் தோறும் ஓரே கூட்டமாக கூடி செயல்பட்டு வந்தது.

செயல்பாடுகள்

  • திருவழிபாட்டுக்குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு திருப்பலி முடிந்ததும் நடைபெறும்.  அதில் அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற வழிபாடு பற்றிய திறனாய்வு நடைபெறும். பங்கில் செயல்படுகின்ற அனைத்து அன்பியங்கள் மற்றும் இயக்கங்களுக்கு தனித்தனியே வழிபாடு சிறப்பு செய்யவாய்ப்புகள் கொடுக்கப்படும்.
  • கூட்டத்தில் அடுத்த 2-வது வாரத்திற்கான வாசகங்கள் வாசிக்கப்பட்டு மையக்கருத்து எடுக்கப்படும்.  அதன் அடிப்படையில் வழிபாடு சிறப்பிக்கும் அன்பியம் மற்றும் இயக்கத்தால் முன்னுரைகள் தயாரிக்கப்பட்டு அடுத்த வார கூட்டத்தில் அது விமர்சனம் செய்யப்படும்.
  • தவக்கால வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை சிந்தனைகளை தயாரித்து அன்பியங்கள் மற்றும் இயக்கங்களுக்கு கொடுத்து அனைவரையும் பங்கேற்க வைக்க முடிகிறது.
  • ஆயரின் பங்கு சந்திப்பு வழிபாடு, புனிதர்களின் பெயர் கொண்ட வினாக்கள், பெரு விழாக்கள் சகல ஆத்துமாக்கள் திருநாள்,  சாம்பல் புதன் வழிபாடு, மற்றும் பெருவிழாக்களின் இடைப்பட்ட நாள் வழிபாடு போன்றவை வழிபாட்டுக் குழுவால் சிறப்பிக்கப்படும்.
  • புனித வார வழிபாடுகள், 9,10 திருவிழாக்கள், கிறிஸ்து பிறப்பு, புது வருட வழிபாடுகள் போன்றவைகள் சிறப்பிக்க இயக்கங்களுக்கு  உந்து சக்தியாக இருந்து செயல்படுகிறது.
  • அனைத்து திருவிழாக்கால வழிபாட்டிற்கும் தேவையான முன்னுரைகள் எழுதி புத்தக வடிவில்தயாரித்து கொடுக்கப்படும்.
  • காலண்டர்கள், பாடல் புத்தகங்கள், மறைபரப்பு கவர்கள், பசிப்பிணி அறப்போர் கவர்கள், தவக்கால உண்டியல்கள் போன்றவை வழிபாட்டுக்குழு உறுப்பினர்களால் அன்பியங்களில் கொடுக்கப்பட்டு நிதி வசூல் செய்யப்படும்.
  • வட்டார மற்றும் மறைவட்ட பயிற்ச்சிகளில் மற்றும் கூட்டங்களில் பங்கெடுத்து தொடர்பு நிலையிலும் வட்டார நிர்வாகத்திலும் இருக்கிறோம்.
  • வருடத்திற்கு ஒருமுறை ஆலயத்திற்கு வர இயலாத நோயாளர் மற்றும் முதியோருக்கான திருப்பலி நிறைவேற்றி அவர்களுக்கு தேநீர் வழங்கி மகிழ்ந்தோம்.
  1. 4-11-2014
  2. 3-8-2015
  3. 2-8-2016
  • பங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியல் நோயாளர் பட்டியல், வாசிப்போர் பட்டியல் தயார்செய்யப்பட்டது.
  • வருடத்திற்கு ஒரு முறை முன்னுரைகள் எழுதுவதற்கான பயிற்சியும், இருமுறை பொதுவான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.  இது தவிர விழாக்காலங்களில் வழிபாடு சிறப்பித்தல் பற்றிய சிறப்பு பயிற்சிகளும் சிறப்பு கூட்டங்களும் நடைபெறும்.
  • வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்லப்படுகிறது.
  • கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவது கிறிஸ்மஸ் நண்பர் தேர்வு செய்வது,  திருவிழா முடிவில் இணைந்து இனிப்புகள் வாங்கி உண்பது போன்ற செயல்கள்செய்து வருகிறோம்.