Parish Choir

பனிமரி பாடகர் குழு

நோக்கம்

வழிபாடுகளில் இறைமக்களை வெறும் பார்வையாளர்களாக அல்லாமல் பங்கேற்பாளர்களாக மாற்றுவது.

துவங்கப்பட்ட காலம்

1992-ம் ஆண்டு  Fr. வின்சென்ட் அவர்களால் பாடகர் குழு துவங்கப்பட்டது.  பின்னர் Fr.P.K.செல்லையன்அவர்களால் புதுப்பிக்கப்பட்டு பனிமரி பாடகர் குழு என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிர்வாகிகள்

இயக்குநர் -பங்குத்தந்தை.M.C.ராஜன்
தலைவர் - திரு.R.ஹென்றி
செயலர் - செல்வி. M. ஹெனிட் ராணி
துணைச் செயலர் - செல்வி.S.ஜானு
பொருளர் - செல்வி. M.சகாய நிஷா
இசை மீட்டுபவர் - திரு.P.M.நாயகம்
உறுப்பினர்கள் - 25

செயல்பாடுகள்

  • பாடகர் குழு திருப்பலி நிறைவேற்றும் பொழுது (3-7-2016) அன்று இரக்கத்தின் ஆண்டைமுன்னிட்டு கல்விக்கான நிதி வழங்கப்பட்டது. (ஏழை மாணவர்களுக்கு)
  • நமது பங்கில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு நிதிவழங்கப்பட்டது.
  • ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்களில் இன்ப சுற்றுலா சென்று வருகின்றோம்.
  • பாடகர் குழுவின் பாதுகாவலியாம் செசிலியம்மாள் திருவிழாவை சிறப்பாககொண்டாடுகின்றோம்.
  • திருவிழா மற்றும் கிறிஸ்து பிறப்பு, உயிர்ப்பு போன்ற விழாக்களுக்கு மையக்கருத்திற்கு ஏற்றார்போல் பாடல்கள் தேர்வு செய்து சிறப்பான பயிற்சிகள் எடுத்து பாடுகிறோம்.
  • எமது பங்கு தவிர்த்து கீழமணக்குடி பங்கிலும் ஒரு நாள் திருவிழா திருப்பலியை நன்கு திட்டமிட்டு சிறப்பான பாடல்கள் தேர்வு செய்து பாடுகிறோம்.
  • மறைமாவட்டங்களில் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பாடல் போட்டியில்பங்கேற்கிறோம்.
  • எமது பங்கில் நடைபெறும் திருமணத் திருப்பலி மற்றும் இறந்தோர் திருப்பலிக்கும் எங்களோடு இணைந்து செயல்பட்டு வரும் பெரியோா் அடங்கிய பாடகர் குழு ஒன்றும், இது தவிர சிறார் பாடகர்குழுவும் செயல்படுகிறது.
  • நோயாளர்களை சந்தித்து அவர்களுக்காக ஜெபம் செய்து வருகிறோம்.
  • புனித வாரம் மற்றும் திருவிழா நாட்களில் பயன்படுத்த சிறப்பு பாடல் புத்தகம் தயார்செய்து கொடுக்கப்படுகிறது.
  • கிறிஸ்மஸ் திருப்பலிக்கு முன் ½ மணி நெரம் கிறிஸ்மஸ் Caral Song பாடப்படுகிறது.

எதிர்காலத் திட்டங்கள்

  • இனி வரும் நாட்களில் புதிய பாடல்களை தேர்ந்தெடுத்து சிறப்பான பயிற்சி பெற்று பாடுவது.
  • இளைய பாடகர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்குவது.
  • எங்களால் இயன்ற அளவு ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவது.
இறுதியாக எங்களை வழிநடத்தும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் எமது பனிமய அன்னைக்கும் நன்றி.