St. Domini Savio Sports Club

புனித டோமினிக் சாவியோ விளையாட்டு மன்ற அறிக்கை

நோக்கம் :

இளைஞர் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு பயிற்சியளிப்பதும் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்யமாக வாழ உதவி செய்வதும் புனித டோமினிக் சாவியோ விளையாட்டு மன்றத்தின் நோக்கமாகும்.

வரலாறு :

புனித டோமினிக் சாவியோ மன்றமானது 2007 ஆம் வருடம் ஜுலை மாதம் 3-ம் தியதி 40 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது ஞாயிற்று கிழமை மட்டும் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதன் பின் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக கோவில் வளாகத்தில் முதல் கூட்டம் நடத்தப்பட்டு, திருப்பலியும், சிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஞாயிறு தோறும் திருப்பலி முடிந்தவுடன் 8.15 முதல் 9.00 மணி வரை மன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. 13-10-2013 அன்று முதல் இக்கூட்டத்தில் சிறுமிகளும் கலந்து கொள்கின்றனர். எங்கள் விளையாட்டு மன்றத்தில் கை பந்து, எறிபந்து, இறகு பந்து, கபடி, கோ.கோ, சதுரங்கம், கேரம் போன்ற பல விளையாட்டுகள் முறையான விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், விடுமுறை நாட்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மாணவர்கள் உற்சாகமாக விளையாடுகின்றனர்.

விளையாட்டு மன்ற பங்கேற்பு :

1. எங்கள் மாணவ, மாணவிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர்.
2. கடந்த 2 வருடங்களாக நாகர்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
3. எங்கள் மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
4. பேரணி, கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர். எடுத்துகாட்டாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, தூய்மை இந்தியா திட்டம் போன்றவை.
5. Volley ball - க்கு புதிதாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
6. எம் மன்ற சார்பில் நடைபெற்ற "முதலுதவி" பயிற்சியில் எம் உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் பங்கிலுள்ள மற்றவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
7. மாதந்தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

எதிர்கால திட்டங்கள் :

1. கோடை விடுமுறையில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த 10 நாட்கள் விளையாட்டு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
2. விளையாட்டு பயிற்சியாளர்கள் வைத்து விளையாட்டு வீரர்களை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.
எம் விளையாட்டு மன்றமானது தூய பனிமய அன்னையின் ஆசியிலும், தலைவரின் வழிகாட்டுதல் படியும், உறுப்பினர்களின் அயராது உழைப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.