Warren Rural Motivation Programme

பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்

    தொடங்கபட்ட நாள் : 04 – 04 - 2016
    தொடங்கிவைத்தவர் : அருட்பணி. V. ஹிலேரியஸ்
    இயக்குநர் : பங்குத்தந்தை. கிறிஸ்து ராஜமணி
    வழிகாட்டி : செல்வி. A. நேவிஸ்
    தலைவர் : திருமதி. நிர்மலா
    செயலர் : திருமதி. லெயோனிஸ் புனிதா
    துணைச்செயலர் : திருமதி. லீமா ரோஸ்
    பொருளர் : திருமதி. செலின் ஆன்றனி ஹெமல்டா
    மொத்த உறுப்பினர்கள் : 57
    கூட்டம் நடைபெறும் நாள் : திங்கள்
    கூடும் நேரம் : மதியம் 3.00 மணி
    கூடும் இடம் : பனிமய அன்னை ஆலய வளாகம்
பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் 2-ம் ஆண்டு குடும்ப விழாவானது 1/4/2018 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா அன்று காலை 10 மணிக்கு மாணவ, மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. விழாவின் சிறப்பு விருந்தினராக திணை கலைக்குழு இயக்குநர் அருட்தந்தை. வில்சன் .பி. வின்சென்ட் கலந்து கொண்டார்கள். விழாவை தலைமையேற்று வழிநடத்தியவர்கள் பங்குத்தந்தை. கிறிஸ்து ராஜமணி அவர்கள். செயலர் லெயோனிஸ் புனிதா அவர்களால் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பங்குத்தந்தை, கிராம முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று செய்தார்கள்.

நோக்கம்

  • சாதி மத இன வேறுபாடுகளை கடந்து பெண்களை ஒருங்கிணைத்து செயல்படுவது.
  • கிராமபுற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது.
  • அதிக வட்டியில் இருந்து விடுபட  உதவியாக இருப்பது.
  • கிராம முன்னேற்ற சங்கமானது ஜாதி மத இன சமயங்களை கடந்து செயல்படுகின்றது. இதில் இந்து, முஸ்லீம் என பலதரப்பட்ட சகோதரிகளும் ஒரே குடும்பமாக இணைந்து உறவாடி  செயல்பட்டு வருகின்றோம்.

செயல்பாடுகள்:

  • பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் நாகர்கோவில் வட்டார பொதுக்குழு கூட்டமானது முதல் முதலில் 25/08/2018 அன்று மதியம் 2:30 மணிக்கு தென்தாமரை குளத்தில் தூய பனிமய மாதா திருமண மணடபத்தில் வைத்து, கிராமிய விழிப்புணர்வு கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தை பொறுப்பேற்று சிறப்பித்தவர்கள் பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் தென்தாமரைகுளம். இக்கூட்டத்திற்கு வட்டார இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்களும், நமது பங்கு தந்தை அருட்பணி டாக்டர் M.C.ராஜன் அவர்களும் தலைமை ஏற்று நடத்தினார்கள். இதில் 319 பெண்கள் கலந்து கொண்டனர்.
  • நாகர்கோவில்  வட்டாரத்தில் 10 மற்றும் 12ம்  வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  அருட்பணி ராஜன் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
  • சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகளும், கருத்துரைகளும், கவிதையும், விழிப்புணர்வு பாடல்களும் இடம்பெற்றன.
  • 20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக 5000/- ரூபாயை பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக வழங்கினோம்.
  • முதல் வங்கி கடனாக 11300/- பெற்று 13 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளோம்.
  • 2-வது வங்கிக் கடன் 65000/- பெற்று 3 உறுப்பினர்கள் பயன்பெறுகிறார்கள்.
  • 3-வது வங்கிக் கடன் 660000/- பெற்று 18 உறுப்பினர்கள் பயன்பெறுகிறார்கள்.
  • திருமதி. பெல்சிபாய் குடும்பத்திற்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடனாக ரூ.30000/-ம், கல்வி கடனாக குறைந்த வட்டியில் திருமதி. மேரி மகிழா குடும்பத்திற்கு ரூ.20000/-ம் கிடைக்கப்பெற்று பயனடைந்துள்ளார்கள்.
  • திருமதி. பெல்சிபாய் குடும்பத்திற்கு 2000/-ரூபாயும், திரு. அருளானந்தம் குடும்பத்திற்கு 1000/-ரூபாயும் நல உதவிகள் செய்துள்ளோம்.
  • 22/1/2018 சுயதொழில் செய்வதற்காக பயிற்ச்சி ஏற்பாடு செய்து, அனைவரும் கலந்து கொண்டோம்.
  • 12/12/2017 அன்று பஜனை நடத்தி 2800/9ரூ நமது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கொடுத்தோம்.
  • எங்கள் சங்க உறுப்பினர்கள் 57 பேரும் இதுவரை 470617/-ரூ சேமித்து உள்ளோம்.
  • மருத்துவ உதவிக்கு ரூ1700/-  ஒருவருக்கு வழங்கப்பட்டது.
 

எதிர்கால திட்டங்கள்

  • பங்கு மறைமாவட்டத்தில் இணைந்து பணியாற்றுவது.
  • வாழ்வுரிமை போராட்டங்களில் இணைத்து கொள்வது.