YCS Boys

இளம் கிறிஸ்தவ  மாணாக்கர் இயக்கம்

YCS ஆண்கள்

கூட்டம்  நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை

கூட்டம்  நடைபெறும்  நேரம்  :  மதியம் 2 முதல் 3 மணிவரை

நோக்கம்

பொதுநல மதிப்பீடுகளை உருவாக்கி பிறரையும் உருவாக்கி உண்மை, அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த ஒரு புதிய சமுதாயம் படைப்பதே இந்த மாணாக்கர் இயக்கத்தின் நோக்கம்.

வரலாறு

20-ம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டது.  மக்கள் இயந்திரங்களை போல் நடத்தப்பட்டனர் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.  இக்காலத்தில் பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்த சுரங்கத் தொழிலாளி  திரு. ஹென்றி  கார்டைன் என்பவர் சுரங்கத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய மீட்புக்காக முயற்சி செய்தார்.  அருட்பணி. ஜோசப் லியொ கார்டைன் தனது அப்பாவின் இலட்சியத்தை நிறைவேற்ற இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கி தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுத்தார். (YCS 1920) இந்த இயக்கத்தில் மாணாக்கரும் இணைந்து செயல்பட்டனர்.  திருத்தந்தை 11-ம் பயஸ் அருட்பணி. ஜோசப் லியொ கார்டைனைப் பாராட்டி மாணாக்கர் மத்தியிலும்  இதை பரவலாக்கம் செய்ய கேட்டு கொண்டார்.

சென்னையில் 1966-ல் அருட்சகோதரி. ஜாண் தேவோஸ் ICM என்பவரால் இளம் கிறிஸ்தவ மாணாக்கர்இயக்கம் தொடங்கப்பட்டது.  3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் YCS பரவியது.  1970-களில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரையும் உள்ளடக்கி YCS அதாவது  இளம் மாணாக்கர் இயக்கமாக வளர்ந்தது.

நமது பங்கில் அருட்பணி. P.K. பால் செல்லையன் பணிக்காலத்தில் இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் தொடங்கப்பட்டது.

வழிகாட்டிகள்             - K. மார்சலின் ரஜூலா, M. சேவியர்

தலைவர்                       - A. ஜெனின்

துணைத்தலைவர்   - E. ஆன்றனி ஆதிஷ்

செயலர்                        - J. ஜெரின்

பொருளர்                     - A. ரியாஷ்

இயக்கத்தின் வழிமுறைகள்

  1. விழிப்புணர்வு
  2. சிந்தனை
  3. செயலர் அறிக்கை
  4. திரும்பிப் பார்த்தல்

செயல்பாடுகள்

வழிபாடுகள், அருட்சாதனக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது, ஈடுபடுவது.

திட்டங்கள்

  • வருடந்தோறும்  இன்ப சுற்றுலா செல்வது.
 

விருது வாக்கு

“தன்னை  உருவாக்கிப்  பிறரை  உருவாக்குவது”