YCS Girls

இளம் கிறிஸ்தவ மாணவியர் இயக்கம்

YCS பெண்கள்

நோக்கம்:

              பொது நல மதிப்பீடுகளை உருவாக்கி பிறரையும் உருவாக்கி உண்மை, அன்பு, நீதி, நோ்மை, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த ஒரு புதிய சமுதாயம் படைப்பதே எம் இளம் கிறிஸ்தவ மாணவியர் இயக்கத்தின் நோக்கம்.

வரலாறு :

              20-ம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டது.  மக்கள் இயந்திரங்களை போல் நடத்தப்பட்டனர் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.  இக்காலத்தில் பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்த சுரங்கத் தொழிலாளி திரு. ஹென்றி கார்டைன் என்பவர் சுரங்கத் தொழிலாளர்களை  ஒருங்கிணைத்து அவர்களுடைய மீட்புக்காக முயற்சி செய்தார்.  அருட்பணி. ஜோசப் லியோ கார்டைன் தனது அப்பாவின் இலட்சியத்தை நிறைவேற்ற இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கி தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுத்தார். (YCW 1920) இந்த இயக்கத்தில் மாணாக்கரும் இணைந்து செயல்பட்டனர். திருத்தந்தை 11-ம் பயஸ் அருட்பணி. ஜோசப் லியோ கார்டைனைப் பாராட்டி மாணாக்கர் மத்தியிலும் இதை பரவலாக்கம் செய்ய கேட்டுக் கொண்டார்.
            சென்னையில் 1966-ல் அருட்சகோதரி. ஜாண் தேவோஸ் ICM என்பவரால் இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் தொடங்கப்பட்டது.  3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் YCS பரவியது. 1970-களில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரையும் உள்ளடக்கி YSM அதாவது இளம் மாணாக்கர் இயக்கமாக வளர்ந்தது.
           நமது பங்கில் அருட்பணி.P.K. செல்லையன் பணிகாலத்தில் இளம் கிறஸ்தவ மாணாக்கர் இயக்கம் தொடங்கப்பட்டது.
கூட்டம் நடைபெறும் இடம்    :       தூய பனிமய அன்னை ஆலயம்
கூட்டம் நடைபெறும் நாள்     :       ஞாயிறு
கூட்டம் நடைபெறும் நேரம்   :        மதியம் 2.00 முதல் 3.00 மணி
வழிகாட்டிகள்                                 :       திருமதி.மோி ஷீலா
                                                                  :        திருமதி. ஜினி ப்ரீத்தா
தலைவர்                                              :       செல்வி. ஹென்ஸி
செயலர்                                                :       செல்வி. அபிஷா
துணைச்செயலர்                             :       செல்வி. ஸ்னோலின்
பொருளர்                                             :       செல்வி. மர்ஷலின்
மொத்த உறுப்பினர்கள்                :        28

இயக்கத்தின் வழிமுறைகள் :

1. துவக்கப்பாடல்
2. தலைப்பு அடிப்படையில் விவாதம்
3. கலந்துரையாடல்
4. தனி நபர் திறமைகள் ( கதை, கவிதை, படைப்புகள்)
5. வழிபாட்டுக்குழு செய்தி பகிர்வு
6. உலக பார்வை (செய்தித்தாள்)
7. அறிக்கை
8. திருப்பிப்பார்த்தல் (கடந்த ஒரு வார நிகழ்வுகள்)
9. இறுதியாக YCS கர ஓசையுடன் நிறைவு பெறும்.

செயல்பாடுகள் :

1. 2011-ம் ஆண்டில் இளம் கிறிஸ்தவ மாணவியர் இயக்கத்தின் 500 வது வார விழாவினை சிறப்பித்தோம்.
2. விற்பனை விழாவன்று வேடிக்கை விளையாட்டுக்கள் நிகழ்த்தி அதில் கிடைத்த பணத்தை எம் பங்கின் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு கொடுக்கப்பட்டது.
3. இயற்கையை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியோடு ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
4. மாதத்தின் இறுதி வாரத்தில் ஆலயம் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டுவரப்படுகிறது.
5. ஒவ்வொரு வருடமும் குருத்தோலை பவனி அன்று அன்பியம் அல்லாத பகுதிகளில் குருத்தோலை கட்டி சிறப்பித்து வருகிறோம்.
6. "தேசிய இளைஞர் எழுச்சி" நாளன்று அன்பிய ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்ற மரம் நடுவிழாவில் பங்கேற்று சிறப்பித்தோம்.
7. ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் இயக்கங்கள் சிறப்பிக்கும் திருப்பலியையும் எம் இயக்க மாணவிகள் இணைந்து சிறப்புற தயாரித்து நிறைவேற்றி வருகின்றோம்.
8. "தலைகவசம் உயிர் கவசம்" என்ற ஹெல்மெட் பேரணியில் எம் இயக்க மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
9. நமது மறைமாவட்ட அளவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் எமது இயக்க மாணவிகள் கலந்து கொண்டனர்.
10. பங்கில் நடைபெற்ற மருத்துவ பயிற்சி, ஓணம், கிறிஸ்மஸ், புத்தாண்டு விழா மற்றும் மணக்குடி திருவிழா என அனைத்து நிகழ்வுகளிலும் இணைந்து சிறப்பித்து வருகிறோம்.
11. நமது வட்டார கூட்டங்களிலும், போதை ஒழிப்பு பயிற்சி கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.
12. YCS சார்பில் சகாய நகரில் "வண்ணங்கள் சங்கமம்" என்ற தலைப்பில் Fr. பெலிக்ஸ் அவர்களின் பயிற்சியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

எதிர்கால திட்டங்கள் :

1. ஆலய வளாகத்தில் மாதத்திற்கு ஒரு செடி நடுதல்.
2. சேமிப்பு முறையில் ஏழை மாணவிக்கு புத்தாடை எடுத்து கொடுத்தல்
3. தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிக்க பயிற்சி எடுத்தல்.

விருது வாக்கு

        "தன்னை உருவாக்கிப் பிறரை உருவாக்குவது"