YCW

இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

புனித ஜார்ஜியார் நற்பணி இயக்கமானது 21/08/2011 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஆன்றனி பென்சிகர் அவர்களது வழிகாட்டுதலின் போில் 61 உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நோக்கம் :

"இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களை நல்வழிபடுத்தி சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே எம் இயக்கத்தின் நோக்கமாகும்.

தற்போது எமது இயக்கத்தின்

தலைவர் : சேம்ஜி எமர்சன்
துணைத்தலைவர் : திரு. ஸ்டாலின்
செயலர் : செல்வன். ஸ்டெபான்ஸ்
துணைச்செயலர் : செல்வன். வினோத் ஜொின்
பொருளர் : திரு. ரெஜிஸ்
அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எமது இயக்கமானது முதல் மற்றும் 3-ம் வாரங்களில் திருப்பலிக்கு பின் நடைபெற்று வருகிறது.

செயல்பாடுகள் :

1. எமது இயக்கத்திற்கு வழங்கப்பட்ட திருவழிபாட்டு நிகழ்ச்சிகளான ஞாயிறு திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலிகளும் சிறப்பாக பொறுப்பேற்று நடத்தி வருகிறது.
2. திருவிழாவின் போது எம் இயக்க உறுப்பினர்கள் தொண்டர் குழுவுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
3. கிறிஸ்மஸ் மற்றும் உயிர்ப்பு விழாவின் போது மின் விளக்குகளால் ஆலயத்தை அழகுபடுத்தி வருகிறோம்.

கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் :

1. எம் பங்கு மக்களின் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதில் எமது இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பங்குமக்களின் இசை மற்றும் நடன ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம்.
2. பங்குமக்களின் அறிவு திறனை வளர்க்கும் வகையிலும் அன்பியங்களின் செயல்பர்ட்டை ஊக்குவிக்கும் வகையிலும் வினாடி வினா போட்டிகள் நடத்தி சுழற்கோப்பை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறோம்.
3. இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் நமது மாவட்ட அளவில் 2 முறை கிரிக்கெட் போட்டி நடத்தி ஊக்குவித்தோம்.

இயக்கம் மேற்கொண்ட நற்பணிகள் :

1. நம் பங்கில் இறைபராமரிப்பு மரியன்னை சபை சகோதரிகளால், நடத்தப்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திற்கு எமது இயக்கம் சார்பில் ரூ.10000 வழங்கினோம்.
2. உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் குமார பெருமாள் விளை திருமதி. ஸ்டெல்லா அவர்களது மகளுக்கு ரூ. 5000 வீதம் 3 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம்.
3. விஜயநகரியை சோ்ந்த திரு,பாண்டியன் என்பவரது மனைவி திருமதி. லெட்சுமி அவர்கள் மருத்துவ செலவிற்கு ரூ. 10000 வழங்கினோம்.
4. குமார பெருமாள் விளையில்வசிக்கும் செல்வகனி என்பவரின் வீட்டு மேற்கூரை அமைக்க ரூ. 5000 வழங்கினோம்.
5. நமது பங்கை சோ்ந்த திரு. குழந்தை ஆன்றனி அவர்கள் சாலை விபத்தில் சிக்கி சிகிட்சை பெறும்போது ரூ.10000 கொடுத்து உதவினோம்.
6. மேலதோப்பு ஊரில் தென்னிந்திய திருச்சபையை சோ்ந்த திரு. ஜாண் சாமுவேல் என்பவரின் மகன் மருத்துவ செலவிற்கு ரூ. 10000 கொடுத்து உதவினோம்.

எதிர்கால திட்டங்கள் :

1. உயர்கல்வி உதவி தொகை மேலும் அதிகரிக்கும் விதத்தில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்த உள்ளோம்.
2. எம் பங்கில் வாழும் ஏழை மற்றும் ஆதரவற்றோரை இனம் கண்டு அவர்களுக்கு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உள்ளோம்.