Youth Boys

விடியல் இளைஞர் இயக்கம்

நோக்கம்

எமது விடியல் இளைஞர் இயக்கத்தின் நோக்கமானது மறைமாவட்ட நோக்கமான “ஒன்று சேர்! உருவாகு! உருகொடு! ” என்னும் நோக்கத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நிர்வாகிகள்

தலைவர் : பிரகாஷ்

செயலர் : அசோரின்

பொருளர் : ஐெஸ்மன்

  • உறுப்பினர்களின் எண்ணிக்கை : 22

கூட்டம் நடைபெறும் இடம், நேரம்

இடம் – தூய பனிமய அன்னை ஆலயம், தென் தாமரைகுளம்

நேரம் -ஞாயிறு மதியம் 2 முதல் 3 மணி வரை

கூட்டம் நடைபெறும் முறை

இயக்க பாடலுடன் ஆரம்பமாகி அறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.  முந்தைய கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தலைவரால் கூட்டம் வழிநடத்தப் படுகிறது.  கூட்டத் தலைவரால் தேர்வு செய்யப்படும் ஒரு தலைப்பை அவர் விளக்கி கூற பின் கூட்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட  கருத்துக்கள்

  • தற்கொலை
  • கலாச்சாரம்
  • அரசியலில் இளையோரின் பங்கு
  • போதை பழக்கம்
  • இன்றைய சமூகத்தில்  இளைஞரின் பங்கு
  • விபத்து எதனால் ஏற்படுகிறது
  • தொலைக்காட்சி நன்மை, தீமை
  • வரதட்சனை கொடுமை
  • எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு
  • சமுதாயத்தில் இளையோரின் பிரச்சனைகள்
  • செல்பொன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மை, தீமை
  • மூட நம்பிக்கை
  • இன்றைய இளைஞர்களின் ஆன்மீகம் பின்பு அந்த வார செய்தி தாள் தகவல்கள் பகிர்ந்துக் கொள்ளப்படும்.

திட்டங்கள்

  • மாணவர்களின் திறமைகளை வளர்க்க ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் போன்றவற்றை ஊக்குவித்தல்
  • இளைஞர் இயக்கத்திற்கு வராத மாணவர்களை சந்தித்து அழைக்க திட்டம் தீட்டப்பட்டது.
  • மறைக்கல்வி மாணவ மாணவிகளின் திறமைகளை வளர்க்க 2 மாதத்திற்கு ஒரு முறை ஓவியபோட்டி நடத்துதல்.

எதிர்கால திட்டங்கள்

  • பங்கில் அனைத்து துணைகுழுக்களோடு சேர்ந்து பங்கை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது.
  • போதை இல்லா சமுதாயம் ஏற்பட முற்படுவது.
  • வாழ்க்கை வழிகாட்டி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவை பற்றிய பயிற்ச்சிகள் பங்கு மாணவர்களுக்கு கொடுப்பது.
  • கல்வி பயில வசதி இல்லாத திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவி செய்வது வருகின்றோம்.
  • உடல் உறுப்பு தானம், இரத்த தானம் செய்வதில் மாணவர்களை ஈடுபடச் செய்வது.
  • சுற்றுபுறச் சூழலை பாதுகாத்து தூய்மை இந்தியாவை உருவாக்க இளையோரை உருவாக்குவது.

செயல்பாடுகள்

  • பல நாட்களாக பல்வேறு கழிவு பொருட்களால் நிறைந்து காணப்பட்ட நமது ஊரிலுள்ள ஆற்றை எம் இயக்க உறுப்பினர்களின் கடின உழைப்பால் சுத்தம் செய்தோம்.
  • நமது கோவிலுக்கு இயக்கம் சார்பாக Inverter வாங்க ரூ.1000/- நன்கொடையாக வழங்கினோம்.
  • 21/1/2017 அன்று தென்தாமரைகுளத்தில் தமிழர் உரிமையை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எமது இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தோம்.
  • ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினவிழாவில் விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளை முன்னின்று நடத்துகிறோம். இதன் மூலம் பங்கு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாக திகழ்கிறோம்.
  • 19/2/2017 அன்று Holy Cross மாணவிகளால் நம் பங்கில் நடைபெற்ற “குடிநோய் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில்” பங்கேற்று அவர்களோடு இணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம்.
  • குருத்தோலை ஞாயிறுக்கு முந்தின நாள் குமார பெருமாள் விளை ஆறு முதல் பள்ளி வாசல் வரை உள்ள இடம் சுத்தம் செய்தோம்.
  • நம் ஊரில் குருத்தோலை ஞாயிறு அன்று பாரம்பரியமாக நடக்கும் சமபந்தி விருந்தில் முழுவதும் நின்று உதவி புரிந்தோம்.
  • மேலும் சமபந்தி விருந்துக்கு இயக்கம் சார்பாக ரூ.1000/- நன்கொடை வழங்கினோம்.
  • குமரி சமூக விடியல் இயக்கம் சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு தேவையான உதவிகளை செய்து ஆதரவு அளித்தோம்.
  • 25/6/2017 அன்று சகாயபுரத்தில் உள்ள முதியோர்களை சந்தித்து சில மணி துளிகள் அவர்களோடு உரையாடி பின் தேநீர் வழங்கினோம்.
  • 16/7/2017 அன்று எங்கள் இயக்கம் சார்பாக எமது பங்கில் அருட்பணி. நெல்சன் தலைமையில் “மது மறுவாழ்வு” கூட்டம் ஏற்பாடு செய்தோம். அதன் விளைவாக பலர் மனம் திருந்தினார்கள்.
  • பங்கு திருவிழாவிற்கு ஆயத்தமாக திருவிழாவிற்கு முன்னும் பின்னும் ஆலய வளாகத்தை சுத்தம் செய்தோம்.
  • 9/7/2017 அன்று பொதுமக்களுக்கு இடையராக இருக்கும்  வகையில் எமது ஊரில் பள்ளி வாசல் பின்புறம் தேங்கி கிடந்த கழிவு பொருட்களை குமரி சமூக விடியல் இயக்கத்துடன் இணைந்து சுத்தம் செய்தோம்.
  • Holy Cross MSW மாணவிகள் நடத்திய விழுதுகள் – 2017 சமூக பயிற்ச்சிக்காக பல உதவிகளை செய்து ஆதரவு கொடுத்தோம்.
  • 15.30/9/2017 அன்று விழுதுகள் 2017 நிறைவு விழாவில் எம் இயக்கத்திற்கு நினைவு பரிசு தந்து கௌரவித்தார்கள்.
  • Holy Cross கல்லூரி மாணவிகள் நடத்திய சுயவேலை வாய்ப்பு பயிற்ச்சியில் கலந்து கொண்டதன் பயனாக எம் சொந்த தயாரிப்பில் ஓமவாட்டர்,  Phenoil, Surf ஆகியவை தயாரித்து விற்று வருகின்றோம்.
  • 17/10/2017 அன்று இயக்கம் சார்பாக Bench Press போட்டி நடத்தி பரிசுகள் கொடுத்தோம்.
  • 29/10/2017 அன்று மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “டெங்கு விழிப்புணர்வு குறும்படம்” தயாரிக்கப்பட்டு மறைக்கல்வி மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
  • 29/10/2017 அன்று நடைபெற்ற ஜெபமாலை பவனிக்காக எம் உறுப்பினர்களின் விடாமுயற்ச்சியால் இரண்டு முறை மழையால் ரோடு வீதிகளில் தேங்கி கிடந்த தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டது.
  • 1/12/2017 மற்றும் 2/12/2017  ஆகிய இரு தினங்களில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட நமது சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று நிவாரண பணிகள் செய்தோம்.
  • கிறிஸ்துமஸ் விழாவிற்கு குடில், நட்சத்திரம் மற்றும் அலங்கார நீர்வீழ்ச்சி ஆகியவை Media குழுவுடன் இணைந்து செய்தோம்.
  • 19/11/2017 அன்று வட்டார இயக்குநர் அருட்பணி. சைமன் அவர்கள் இயக்க கூட்டத்திற்கு வருகை தந்து எம் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள்.
  • 12/1/2018 அன்று கோவளத்தில் நடைபெற்ற பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
  • 20/1/2018 அன்று தென்தாமரைகுளத்தில் குமரி சமூக விடியல் இயக்கம் நடத்திய சரக்கு பெட்டக எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம்.
  • மேலும் மாதந்தோறும் நடக்கும் சரக்கு பெட்டக எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு  போராட்ட இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வருகிறோம்.
  • 26/1/2018 அன்று நடந்த எம் இயக்க ஆண்டு விழாவில் ஏழை மாணவன் ஒருவனுக்கு ரூ.500/- கல்வி செலவுக்காக வழங்கப்பட்டது.
  • இரக்க செயலாக முதியோர் இல்லம், அனாதைகள் இல்லம் சந்தித்தல்
  • பங்கு மாணவ மாணவிகளின் ஓவிய திறமையை வளர்க்க மாதத்தின் 2-ம் ஞாயிறு ஓவியம் வரைய செய்தோம்.
  • வருடத்திற்கு இரண்டு முறை பங்கில் திருப்பலி சிறப்பிக்கின்றோம்.
  • மறைமாவட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டோம்.
  • இளைஞர் இயக்கத்திற்கு வராத மாணவர்களை வீடுவீடாக சென்று அவர்களிடம் பேசி கூட்டத்திற்கு வருமாறு அழைத்தோம்.
  • 14 – 4 – 2015 அன்று நடைபெற்ற “பாலியல் வன் கொடுமைகளை வேரறுப்போம்” என்ற மனிதசங்கிலி போராட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
  • 15- 8- 2015 அன்று தலைகவசத்தின் அவசியத்தை உணர்த்தி நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.