Youth Girls

matha (6)

உதய தாரகை பெண்கள் இளைஞர் இயக்கம்

நோக்கம்

“சிதறி கிடக்கும் இளைஞர்களை ஒருங்கணைத்து மனித மாண்புடன் முழு மனித விடுதலைக்காக மலரும்இறையரசை உருவாக்குதல்”

நிர்வாகிகள்

  தலைவர் - செல்வி.P.அக்ஸலின் ஸ்டெனி
  செயலர் - செல்வி.M.ரெக்ஸலின் சுபிதா
  துணை செயலர் - செல்வி.M.தினேஷ் மோனிஷா லவி
  பொருளர் - செல்வி.ரிஜுஷா
  துணை பொருளர் - செல்வி.ஜெனிஸ்
  நடைபெறும் இடம் - தூய பனிமய அன்னை ஆலயம்
  நடைபெறும் நேரம் - ஞாயிறு மதியம் 2 முதல் 3 மணி வரை
  உறுப்பினர்களின் எண்ணிக்கை - 30

கூட்டம் நடைபெறும் முறை

இயக்க பாடலுடன் ஆரம்பமாகி அறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.  முந்தைய கூட்டத்தில்தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தலைவரால் கூட்டம் வழிநடத்தப்படுகிறது.  கூட்டத்தலைவரால் தேர்வுசெய்யப்படும் ஒரு தலைப்பை அவர் விளக்கி கூற பின் கூட்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வார்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்

 • தற்கொலை
 • கலாச்சாரம்
 • அரசியலில் இளையோரின் பங்கு
 • போதை பழக்கம்
 • இன்றைய சமூகத்தில் இளைஞரின் பங்கு
 • விபத்து எதனால் ஏற்படுகிறது
 • தொலைக்காட்சி  நன்மை, தீமை
 • வரதட்சனை  கொடுமை
 • எய்ட்ஸ் பற்றிய  விழிப்புணர்வு
 • சமுதாயத்தில் இளையோரின் பிரச்சனைகள்
 • செல் போன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மை, தீமை
 • மூட நம்பிக்கை
 • இன்றைய இளைஞர்களின் ஆன்மீகம் பின்பு அந்த வார செய்தி தாள் தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்படும்.

திட்டங்கள்

 • மாணவர்களின் திறமைகளை வளர்க்க ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் போன்றவற்றைஊக்குவித்தல்
 • இளைஞர் இயக்கத்திற்கு வராத மாணவர்களை சந்தித்து அழைக்க திட்டம் தீட்டப்பட்டது.
 • மறைக்கல்வி மாணவ மாணவிகளின் திறமைகளை வளர்க்க 2 மாதத்திற்கு ஒரு முறைஓவியபோட்டி நடத்துதல்.

செயல்பாடுகள்

 • 15/8/2018 அன்று எம் ஆலயம் தொடங்கி சுற்றியிருக்கும் சிறு ஊர்கள் வழியாக பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி  நடத்தினோம்.
 • 05/08/2018 அன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நமது மறைமாவட்டம் சார்பாக நடத்தப்பட்டது throw ball போட்டியில் எம் இளைஞர் இயக்க பெண்கள் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றனர்.
 • ஏழை மாணவரின் கல்வி உதவிக்காக எம் இயக்கம் சார்பாக ரூ 10000/- வழங்கப்பட்டது.
 • தெருக்களில் குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன இதனை தடுப்பதற்கு குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுப்பதற்கும், தெருக்கள் தோறும் முறையான தினங்களில் குப்பை வண்டி அனுப்பித் தரவேண்டும் என்று வலியுறுத்தி 17/4/2018 அன்று தென்தாமரைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் (EO) முறைப்படி மனு அளித்தோம்.
 • 28/4/2018 அன்று கடலம்மா என அழைக்கப்படும் திருமதி. ஜூடி சுந்தர் அவர்கள் தலைமையில் நேரத்தின் மதிப்பு, பெண்களின் நிலைப் பற்றி சிறிய கருத்தரங்கு நடத்தப்பட்டது.
 • மனதை புத்தெழுச்சி பெறச் செய்யும் விதமாகவும், ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இயக்க உறுப்பினர்கள் இணைந்து 6/7/2018 அன்று சுற்றுலா சென்று வந்தோம்.
 • செங்கல் சூளையில் வசிக்கும் வெளிமாநில மக்களுடன் ஒரு நாள் 18 /2/ 2018 வேலைக்கேற்ற கூலி கிடைக்காமலும், வறுமையின் காரணமாகவும் கல்கத்தாவில்  இருந்து வெளியேறி எங்கள் ஊரின் அருகில் உள்ள அச்சன்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் வசிக்கும் வெளி மாநில மக்களின் பசியைப் போக்கும் விதமாகவும், சரியான உடையின்றி இருக்கும் அவர்களுக்கு ஆடைகள் வழங்கவும், அவர்கள் நம்மை நாடி வந்துள்ளதால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அவர்களுடன் ஒரு நாள் செலவிட்டோம். அங்குள்ள சிறு குழந்தைகளுக்கு புதிய ஆடைகளும், பெரியவர்களுக்கு எங்களிடம் உள்ள பழைய ஆடைகளையும் வழங்கினோம். சிறு குழந்தைகளுக்கு நாங்களே ஆடை அணிவித்து மகிழ்ந்தோம். மேலும் நாங்கள் எங்கள் இல்லங்களிலிருந்து கொண்டு சென்ற காய்கறிகள், அரிசி, மசாலா பொருட்களை பயன்படுத்தி அங்கேயே உணவு சமைத்து நாங்களே அவர்களுக்கு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். மேலும் அவர்களிடம் பரவலாக காணப்படும் குழந்தை திருமணங்களை அறவே  ஒழிக்குமாறு விழிப்புணர்வும்,  அவர்கள் குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறி வந்துள்ளோம்.
 • பொங்கல்திருநாள் 14/01/2018 சாதி, சமய, மதங்களை கடந்து உழவர் திருநாளாம் பொங்கல் விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்கிறோம். உழவர்கள் சேற்றில் நாள் முழுவதும் உழைத்தால் தான் நமக்கு புத்தரிசி கிடைக்கும். அதை நாம் மனதில் கொண்டு உழவர்களை மதித்து நடக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாகவும்,  நமது பாரம்பரிய விழாவான தமிழர் திருநாளை சிறப்பிக்கும் விதமாகவும் நாங்கள் அனைவரும் இணைந்து, புதுப்பானையில் புத்தரிசி இட்டு, சர்க்கரை பொங்கலிட்டு, கோலமிட்டு, தித்திக்கும் செங்கரும்பு தின்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோம்.
 • தேசிய இளைஞர் தினம் 13/ 1 / 2018. நாளைய இந்தியாவை உருவாக்கப்போவது இன்றைய இளைஞர்கள் தான். துடிப்பும், வேகமும், திறமையும் உள்ள இளைஞர்கள் குன்றின்மேல் ஏற்றிய தீபமாக ஒளி வீசும் போது நாடே முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இதை கருத்தில் கொண்டு இளைஞர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் விதத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13/ 1/  2018 சனிக்கிழமை இளைஞர்களுக்கு ஒரு கருத்தரங்கு வழங்கினோம்.
 • ஜெபமாலை மாதத்தில் ஒரு நாள்  இளைஞர்களாகிய நாங்கள் சிறப்பித்தோம். எம் பங்கில் நடைபெற்ற விவிலிய கண்காட்சி, Christmas carol, வியாபார சந்தை தினம், பனித்துறல் குழு நடத்திய போட்டி, கீழமணக்குடி திருவிழா மற்றும் சகாயபுரம் பங்கில் நடைபெற்ற நடனப்போட்டி என எங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் சிறப்பாக செயல்படுத்தி பயனடைந்துள்ளோம். கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக எம் ஆலயத்தில் விடியல் இளையோர் இயக்கத்தால் கட்டப்பட்ட குடில் மற்றும் ஆலயத்தை அலங்கரிக்கத் தேவையான அனைத்து அலங்கார பொருள்களும் எம் உதயதாரகை பெண்களால் செய்து கொடுக்கப்பட்டது.
 • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் பணியை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி 7/1/2018 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அறவழி போராட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு எம்முடைய உடன் இருப்பை தெரிவித்தோம்.
 • 11/1/2018 அன்று எம் பங்கில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டம் மற்றும் சாகர்மாலா திட்டத்தை பற்றி அருட்பணி சைமன் அவர்களால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டோம்.
 • இயற்கை முறையில் மாடி தோட்டம் அமைத்தல்15/10/2017. இயற்கையான உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், நஞ்சில்லா உணவுகள் உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நமக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து அதை பறித்து உண்ணும் போது ஏற்படும் மன நிறைவான சந்தோஷத்தை அதிகப்படுத்தவும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. தினமும் நீர் ஊற்றி, களைகளை பிடுங்கி, செடிகளை கவனமாக கவனித்து வருகிறோம். இதன் மூலம் எங்களுக்கு சிறு வருவாய் கிடைப்பது மட்டுமல்லாமல், எங்களைப் பார்த்து  பிற மக்களும் தங்கள் இல்லங்களில் தோட்டம் அமைத்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
 • முதியோர் மனங்களை மகிழ்வித்தல் 10/9 /2017. முதுமையில் தான் இளமை திரும்பும்; அவர்கள் சிறு குழந்தைகள் போல் நடந்து கொள்வார்கள். அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மையப்படுத்தி, முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், அவர்களின் கடந்த கால  நினைவுகளை நினைவு படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் ஆடையினை பரிசாக வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் அன்பையும், பொக்கைவாய் புன்சிரிப்பையும் பரிசாக பெற்றோம்.
 • HIV -யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்தல் 16 12 2017. திருநெல்வேலியில் இருக்கும் Hope Trust -ல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, குடும்ப உறவினர்கள் ஓரங்கட்டப்பட்டு, எச்ஐவி கிருமி தாக்கப்பட்ட குழந்தைகள் வாழும் இல்லத்திற்கு சென்று ஒரு நாள் அவர்களோடு பேசி, உறவாடி, மகிழ்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்வித்து வந்தோம். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த கடலை வகைகள், பயிறு வகைகள் போன்றவற்றை அவர்களுக்கு அளித்து அவர்கள் சிரிப்பில் நாங்கள் மகிழ்ந்தோம். மேலும்  இக்குழந்தைகளுக்கு நாங்கள் படித்து முடித்துவிட்டு  வேலைக்கு போகும்போது  எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம். என்று எம் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி  எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த நோயை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
 • இரக்க செயலாக  முதியோர்  இல்லம், அனாதைகள்  இல்லம் சந்தித்தல்
 • பங்கு  மாணவ மாணவிகளின்  ஓவிய திறமையை வளர்க்க  மாதத்தின் 2-ம் ஞாயிறு ஓவியம்வரைய  செய்தோம்.
 • வருடத்திற்கு  இரண்டு முறை பங்கில் திருப்பலி சிறப்பிக்கின்றோம்.
 • மறைமாவட்டத்தில்  நடைபெற்ற  கிறிஸ்மஸ்  நிகழ்ச்சியில் இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டோம்.
 • இளைஞர் இயக்கத்திற்கு வராத மாணவர்களை வீடுவீடாக சென்று அவர்களிடம் பேசிகூட்டத்திற்கு வருமாறு அழைத்தோம்.
 • 14 - 4 - 2015 அன்று நடைபெற்ற “பாலியல் வன் கொடுமைகளை  வேரறுப்போம்” என்ற மனிதசங்கிலி போராட்டத்தில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 • 15- 8- 2015 அன்று தலைகவசத்தின்  அவசியத்தை உணர்த்தி  நடைபெற்ற இரு சக்கர வாகனபேரணியில் எம் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

எதிர்கால திட்டங்கள்

 • உடல் உறுப்பு தானம், இரத்த தானம் செய்வதில்  மாணவர்களை   ஈடுபடச் செய்வது.
 • சுற்றுபுறச் சூழலை  பாதுகாத்து தூய்மை இந்தியாவை உருவாக்க  இளையோரை உருவாக்குவது.