பனித்தூறல்
நமது தென் தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்குச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது பங்கு அருட்பணி திட்டம். அதில் மிக முக்கியமானது பங்குச் செய்தி மலர்.
2014 அக்டோபர் மாத பங்குப்பேரவை கூட்டத்தில் அருட்பணி. Dr.V. ஹிலேரியஸ் அவர்களால் செய்திமலர் உருவாக்குவது பற்றிய கருத்து விதைக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக மலர் வெளியீட்டுக்குழு ஒன்றுஉருவாக்கப்பட்டது
இரண்டு கட்ட தேர்வு முறையில் இரு அருட்பணியாளர்களின் பரிந்துரையின் பேரில் இதழின் பெயர் “பனித்தூறல்” என முடிவு செய்யப்பட்டது.
பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகளின் வழிகாட்டுதல், பங்குப்பேரவையின் ஒத்துழைப்பு, பங்குமக்களின் ஆர்வம், வெளியீட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பு அனைத்தும் ஒன்று சேர்த்து பனித்தூறல் மும்மாத இதழ் உரமூட்டப்பட்டது.
அதன் பலனாக 2015 ஜனவரி 1-ம் நாள் புத்தாண்டு மகிழ்வோடு செய்தி மலர் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
ஆரோக்கியமான நிபந்தனைகளோடு 32 பக்கங்களில் கவிதை, கதை, கட்டுரை, விடுகதை, பழமொழி, பொதுஅறிவு, மருத்துவம், சமையல் பற்றிய குறிப்புகள், அறிவியல் சாதனைகள், அரசியல் விமர்சனங்கள், வரலாற்று தலைவர்கள், உலகச் செய்திகள் விவிலிய மாமனிதர்கள், புனிதர்களின் வரலாறு, வரலாற்றுச்சுவடுகள், பங்கில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் பங்கு வரலாறு, ஓவியங்கள், விவிலிய குறுக்கெழுத்து போட்டி, என மூன்று மாதத்திற்கு ஒரு முறை நம் இல்லங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இதழின் நோக்கம்
நம்மவர்களின் சிந்தனையை விரிவாக்கி எழுத்து மற்றும் ஓவியத் திறன்களை வளர்ப்பது, வெளிகொணர்வது.
நம் பங்கின் பொன் விழா பயணத்தில் பனித்தூறல் 2 ஆண்டுகள் நிறைவு செய்து 3-ம் ஆண்டில் தன்வளர்ச்சியில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க தயாராக உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த நம் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி.Dr.V. ஹிலேரியஸ் அவர்களுக்கும்தொடர்ந்து ஆதரித்து வரும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. Dr.Fr.M.C.ராஜன் அவர்களுக்கும், முன்னாள் இந்நாள் பங்குப்பேரவை, மற்றும் பங்கு மக்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்தநன்றி……..
வெளியீட்டுக்குழு
ஒருங்கிணைப்பாளர் பங்குத்தந்தை. அருட்பணி.Dr.Fr.M.C. ராஜன்
உறுப்பினர்கள்
Sr.S.ஜோஸ்பின்
திருமதி.T. சிந்திகா
திருமதி.P. லெல்லிஸ்
திரு.G. சாம்ஜி ஜெபர்சன்
திரு. M.சேவியர்
திரு. J. மைக்கிள் ராஜ்
திரு. Y.M. ஆன்றனி
திரு.M.L. ஜாண்சன்
பொறுப்பாசிரியர்
செல்வி. ஹென்ஸி
சந்தா பொறுப்பாளர்கள்
அனைத்து அன்பிய பங்குப்பேரவை உறுப்பினர்கள்